ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

செவ்வாய், ஜனவரி 3, 2017, சென்னை : தவறான செய்திகள் வெளியிட்டு கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டாம் என்று மு.க. ஸ்டாலினை, அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த டிசம்பர் 26-ம் தேதி முரசொலி நாளிதழில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘கூட்டுறவு வங்கிகளில் 8.11.2016க்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் பெரிய அளவில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், கறுப்புப் பணத்தை டெபாசிட்

முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்குப் பெருமை சேர்ப்பேன் ; அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதி

முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்குப் பெருமை சேர்ப்பேன் ; அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதி

ஞாயிறு,ஜனவரி 1,2017, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்குப் பெருமை சேர்ப்பேன் என்று தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதி அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக மக்கள் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் பல கோடி மக்கள் நம் அன்புக்குரிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்மோடு இல்லையே என ஆழ்ந்த மன வேதனையோடும், அவர் மீதான அன்பு நினைவுகளோடும் இருப்பதை உணர்கிறோம்.மக்களுக்காக வாழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருந்தவர் ஜெயலலிதா.

இன்று ஆங்கிலப் புத்தாண்டு ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

இன்று ஆங்கிலப் புத்தாண்டு ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஞாயிறு,ஜனவரி 1,2017, ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதும் தான் தனது அரசின் குறிக்கோள் என்று சூளுரைத்து, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலா இன்று பொறுப்பேற்பு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலா இன்று பொறுப்பேற்பு

சனி,டிசம்பர் 31,2016, சென்னை: அதிமுகவின் பொதுச் செயலராக வி.கே. சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அதிமுகவின் பொதுச் செயலர் அறைக்குச் சென்ற சசிகலா, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, பொதுச் செயலர் நாற்காலியில் அமர்ந்தார். அதிமுக பொதுச் செயலராக பதவியேற்றுக் கொண்ட சசிகலா, அங்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட, அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னையில் வியாழக்கிழமை  நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி

வெள்ளி,டிசம்பர் 30,2016, சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா சென்னை மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி  உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அக்கட்சியின் புதிய பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் சசிகலா இன்று மாலை சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு : அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு : அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

வியாழன்,டிசம்பர் 29,2016, சென்னை: இன்று காலை சென்னை வானகரத்தில் துவங்கிய அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதிமுக பொதுச் செயலராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, உடல்நிலைக் குறைவு காரணமாக டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதிமுக பொதுச் செயலராக, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவை

அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது

அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது

வியாழன்,டிசம்பர் 29,2016, சென்னை ; அதிமுக பொதுக் குழு இன்று வியாழக்கிழமை கூடுகிறது. பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி மட்டுமே இந்தக் கூட்டத்தில் நடைபெறும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதன்படி, அதிமுக பொதுக் குழு கூட்டம், இன்று வியாழக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது. விதிகளின்