தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் ; சபாநாயகர் ப.தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் ; சபாநாயகர் ப.தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

புதன்கிழமை , நவம்பர் 30, 2016, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த வி.செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, ஏ.கே.போஸ் ஆகியோர் சட்டப் பேரவை உறுப்பினர்களாக (எம்எல்ஏ) நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்தது. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜியும், தஞ்சாவூரில் எம்.ரெங்கசாமியும்,

முதல்வர் ஜெயலலிதா நலம்பெற பாதயாத்திரையாக தர்மபுரியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை வந்த அ.தி.மு.க தொண்டர்கள்

முதல்வர் ஜெயலலிதா நலம்பெற பாதயாத்திரையாக தர்மபுரியில் இருந்து  அப்பல்லோ மருத்துவமனை வந்த அ.தி.மு.க தொண்டர்கள்

செவ்வாய், நவம்பர் 29,2016, சென்னை ; முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை மேற்கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள் தர்மபுரியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு பாதயாத்திரையாக வந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினரின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதன்மூலம் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பினார் முதல்வர் ஜெயலலிதா ; நிற்க, நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

இயல்பு நிலைக்கு திரும்பினார் முதல்வர் ஜெயலலிதா ; நிற்க, நடக்க  பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

செவ்வாய், நவம்பர் 29,2016, சென்னை : உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவற்றில் இருந்து குணமாகிய நிலையில் அவருக்கு நிற்கவும், நடக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசரசிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர் கண்காணிப்பில் நிற்கவும், நடக்கவுமான சிறிய சிறிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 69-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு

செவ்வாய், நவம்பர் 29,2016, சென்னை;தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை கோட்டையில் இன்று சபாநாயகர் ப.தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பொதுத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 22-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க.

திருப்பூர் அருகே கட்டணமின்றி நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நன்றி

திருப்பூர் அருகே  கட்டணமின்றி நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நன்றி

திங்கள் , நவம்பர் 28,2016, திருப்பூர் அருகே நடைபெற்ற தமிழக அரசின் கட்டணமில்லா சிறப்பு மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூலாவாடி கிராமத்தில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், சர்க்கரை நோய், இருதய நோய், பல் மருத்துவம், கண் சிகிச்சை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் : அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் : அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்பு

திங்கள் , நவம்பர் 28,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாதம்பட்டி பகுதியில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளுக்கான பூமி பூஜையில் அமைச்சர் S.P.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து, ஆலாந்துறை பேரூராட்சியில், பெருமாள்கோவில் வீதி முதல் பால்காரர் தோட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எழுந்து நிற்க பயிற்சி ; அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எழுந்து நிற்க பயிற்சி ; அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

திங்கள் , நவம்பர் 28,2016, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்க நேற்று பயிற்சி அளிக்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22–ந் தேதி உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று 67–ம் நாளாக சிகிச்சை பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் பிசியோதெரபி