மத்திய அரசின் அறிவிப்பால் பயிர்க்கடன் வழங்குவதில் கடுமையான பாதிப்பு : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

மத்திய அரசின் அறிவிப்பால் பயிர்க்கடன் வழங்குவதில் கடுமையான பாதிப்பு : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

வியாழன் , நவம்பர் 17,2016, மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் முடங்கிப்போயுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று

தொலைக்காட்சி பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா ; 19-ந்தேதி தனிவார்டுக்கு மாற்ற படுவார் என தகவல்

தொலைக்காட்சி பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா ; 19-ந்தேதி தனிவார்டுக்கு மாற்ற படுவார் என தகவல்

வியாழன் , நவம்பர் 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறையில் உள்ள டெலிவிஷனை பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார்.தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் அவர் இயல்பாக பேசுகிறார்.எனவே முதல்வர் ஜெயலலிதாவை வருகிற 19-ந்தேதி(சனிக்கிழமை) தனிவார்டுக்கு மாற்ற இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் டாக்டர் சிவக்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து,4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து,4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரிப்பு

புதன், நவம்பர் 16,2016, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய இருப்பதால், இத் தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கழகத் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர், வாக்காளர்களை சந்தித்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான மக்கள் நலத் திட்டங்களையும், எண்ணற்ற சாதனைகளையும் விளக்கமாக எடுத்துரைத்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை

விரைவில் தனி வார்டுக்கு மாற இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறை தயாராகிறது

விரைவில் தனி வார்டுக்கு மாற இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறை தயாராகிறது

புதன், நவம்பர் 16,2016, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இயற்கையாகவே சுவாசிக்கிறார். விரைவில் தனி வார்டுக்கு மாற இருப்பதால் அவருக்கான அறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையில் உள்ள அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழுவும், லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர்

மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா ஆதரிக்க மாட்டார் : சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா ஆதரிக்க மாட்டார் : சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

புதன், நவம்பர் 16,2016, மக்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் முதல்வர் ஜெயலலிதா ஆதரிக்கமாட்டார் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சி.ஆர்.சரஸ்வதி அளித்த சிறப்புப் பேட்டி; தேர்தலில் வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர், இந்தப் பிரச்சினை யில் அறிக்கை விடவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே? குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் இவர்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடும் முன்பு முழுமையாக ஆராய வேண்டும் அல்லவா? அதனால்தான் தாமதமாகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து விரைவில் தனி வார்டுக்கு மாற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து  விரைவில் தனி வார்டுக்கு மாற்றம்

செவ்வாய், நவம்பர் 15,2016, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, விரைவில் தனி வார்டுக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையில் உள்ள அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழுவும், லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் குழுவினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறப்பான

ஏழை மாணவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.21 லட்சம் கல்வி உதவித் தொகை ; அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் வழங்கினார்

ஏழை மாணவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.21 லட்சம் கல்வி உதவித் தொகை ; அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் வழங்கினார்

செவ்வாய், நவம்பர் 15,2016, மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்கும் 29 ஏழை, எளிய மாணவ -மாணவியருக்கு அதிமுக சார்பில் கல்வித் தொகை வழங்கப்பட்டது. இந்த உதவிகளை அம்மா பெஸ்ட் நல அறக்கட்டளை சார்பில் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் நேற்று திங்கள்கிழமை வழங்கினார். இதுகுறித்து, புரட்சி தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., முதலான படிப்புகளை படித்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த