Bodinayakanur

MLA Mr. O. Panneerselvam with CM

 
MLA Mr. O. Panneerselvam

 

 

MLA Mr. O. Panneerselvam

 

 

 

Father Name Ottakara thevar
Party AIADMK
Date of Birth 14th January 1951
Place of Birth Periyakulam
Education B.A.
Occupation Agriculture
Marital Status Married; Three Children
Address Chennai: “Thenpennai” N.B.31, P.S. Kumarasamy Raja Salai, Chennai-600 028.
Mofussil: New No. 145, South Agraharam, Thenkarai, Periyakulam, Theni District- 625 601.
Telephone Chennai–Residence: 044-24933112
Office: 044-25674113; Secretariat Intercom: 5350
Mobile: +91 9566213535; 9994288595
E-mail mlabodinayakanur@tn.gov.in
Facebook https://www.facebook.com/pages/O-Panneerselvam/108192815868686

Bodinayakanur (State Assembly Constituency)

Bodinayakanur is a state assembly constituency in Tamil Nadu. The constituency is in existence since 1957 election.

Total Voters:

Male: 1,27,706
Female: 1,29,381
Transgender: 11
Total: 2,57,098

 

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

மே 12,2016,

முதல்வரின் சாதனைகள் தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என போடியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நடிகை விந்தியா செவ்வாய்க்கிழமை பேசினார்.

 போடியில் அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்து பேசியதாவது: திமுகவினர் பல தவறுகளை செய்து விட்டு தற்போது வாக்கு கேட்டு வருகின்றனர். தமிழக மக்கள் தவறை மறப்பார்கள், மன்னிப்பார்கள், துரோகத்தையும், துரோகிகளையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எனவே இந்தத் தேர்தலில் திமுகவுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். தேமுதிக. தலைவர் விஜயகாந்த் தலைமையிலான 6 கட்சி கூட்டணி அதிமுகவை வீழ்த்துவோம் எனக் கூறுகின்றனர். ஆனால் அதிமுக ஆயிரம் பேர் வந்தாலும் வீழ்த்த முடியாத இரும்பு கோட்டை. தொடர்ந்து தமிழக முதல்வரின் சாதனைகள் தொடர அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

 பிரசாரத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், தேனி எம்.பி. பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

“அதிமுக ஒரு பக்தி இயக்கம்’

மே 11,2016,

போடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து போடியில் வ.உ.சி. சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியது: தமிழகத்தை காப்பாற்றி எல்லா வகையிலும் நன்மை செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. அவர் சட்டத்தை மதித்து, அனைத்து ஜாதி,மத மக்களையும் மதித்து மத நல்லிணக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். அ.தி.மு.க.வை மதுரை ஆதீனம் சபை 1990ஆம் ஆண்டு முதல் ஆதரித்து வருவதற்கு காரணமே, அதிமுகவில் ஜாதி,மத வேறுபாடு இல்லாததுதான். இந்துக்கள் கேதார்நாத் செல்லவும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் ஹஜ் செல்லவும் அதிமுக ஆட்சியில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான கட்சி பக்தி இயக்கமாக திகழ்ந்து வருகிறது. சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது தொற்றுநோயோ, மிகப்பெரிய உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இதற்கு முதல்வரின் இறை பிரார்த்தனை தான் காரணம். அதிமுக ஆட்சியில் மக்கள் மன நிறைவோடு இருக்கின்றனர். மக்களுக்கு அனைத்துவிதமான சலுகைகளையும் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். அவரது தலைமையிலான ஆட்சி மீண்டும் வருவதற்கு அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள் என்றார்.

அதிமுக தேர்தல் அறிக்கை திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்: அமைச்சர்

மே 10,2016,

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 சதவிகிதம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பழனிசெட்டிபட்டியில் திங்கள்கிழமை போடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்து பேசியதாவது: அதிமுக ஆட்சியில் எதிர்கால சந்ததிக்கும் பயனளிக்கும் வகையில் தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.86 ஆயிரம் கோடியில் 50 சதவிகிதம் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கும், 25 சதவிகிதம் கல்வித் துறைக்கும் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதை போல, தற்போதைய தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 சதவிதம் நிறைவேற்றப்படும். போடி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.864 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழனிசெட்டிபட்டியில் ரூ.1 கோடி செலவில் மயானப் பாதை பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.18 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்டப் பணி தொடங்கி நடந்து வருகிறது என்றார்.

போடி மலைவாழ் மக்களிடம் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

மே 9,2016,

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை மலைவாழ் மக்களிடம் அமைச்சரும், போடி தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

 போடி தொகுதிக்குள்பட்ட மலை கிராமங்களான போடிமெட்டு, குரங்கனி, கொட்டகுடி, முந்தல், முந்தல் காலனி உள்ளிட்ட மலை கிராமங்களில் அவர் வீடுவீடாக சென்று வாக்கு கேட்டார். அப்போது அவர் அவர்களுடன் அமர்ந்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அவர் பேசியதாவது: போடி மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ளோம். தாய் திட்டத்தின் கீழ் சுகாதார வளாகம், சமுதாயக் கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. போடியில் ரூ.62 கோடி மதிப்பீட்டில் அரசு பொறியியல் கல்லூரி, ரூ.68 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம், ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.

 பிரசாரத்தின் போது தேனி எம்.பி. ஆர்.பார்த்திபன், தொகுதிச் செயலர் போதுமணி, ஒன்றியச் செயலர் சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து விசுவாதபுரம், பத்திரகாளிபுரம், உப்புக்கோட்டை, குண்டல்நாயக்கன்பட்டி, பாலார்பட்டி, அய்யநாதபுரம், கூழையனூர் உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

போடி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் அமைச்சர் பிரசாரம்

மே 8,2016,

போடி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் 2ஆவது நாளாக சனிக்கிழமை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சில்லமரத்துப்பட்டியில் வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது: ஏழை பெண்களின் திருமணத்துக்கு தற்போது 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இது 8 கிராமாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதே போல் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார். எனவே அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

சில்லமரத்துப்பட்டியில் கவுண்டர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் பிரசாரம் செய்த போது கன்னட உச்சரிப்பில் தமிழில் எழுதிக் கொடுத்த வார்த்தைகளை வாசித்து கன்னடத்தில் வாக்கு கேட்டார்.

தொடர்ந்து அமைச்சர், போடி தர்மத்துப்பட்டி, சிலமலை காலனி, சிலமலை, மணியம்பட்டி, சூலப்புரம், கரியப்பகவுண்டன்பட்டி, கோடிபொம்மிநாயக்கன்பட்டி, வீரசக்கம்மாள்புரம், சமத்துவபுரம், ராசிங்காபுரம், மல்லிங்காபுரம், வடக்குப்பட்டி, தெற்குபட்டி, நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்தார். அவருடன் அதிமுக தொகுதி செயலர் போதுமணி, ஒன்றியச் செயலர் சற்குணம் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

போடி கிராமப் பகுதிகளில் அமைச்சர் பிரசாரம்

மே 7,2016,

போடி அருகே உள்ள கிராமப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சங்கராபுரம், எஸ்.தர்மத்துப்பட்டி, புலிகுத்தி, அய்யம்பட்டி, மார்க்கையன்கோட்டை, எல்லப்பட்டி, முத்துச்சாமிபுரம், குச்சனூர், துரைச்சாமிபுரம், பூலானந்தபுரம் ஆகிய கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும் போது,  அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு இணையதள இணைப்புடன் கூடிய மடிக்கணினி, வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்லிடப்பேசி, விவசாய, கல்விக் கடன்கள் ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.  பிரசாரத்தின் போது போடி தொகுதிச் செயலர் போதுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து சரத்குமார் பிரசாரம்

மே 6,2016,

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனரும், நடிகருமான சரத்குமார் வியாழக்கிழமை கூறினார்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் போடி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவர் பேசியதாவது: அதிமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி சுயநல நோக்கில் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணி. ஒரு மாநிலத்துக்கு முதல்வராகக் கூடியவர் அறிவும், ஆற்றலும், மக்களின் தேவையை புரிந்து கொண்டு தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்துபவராகவும், பொது ஒழுக்கமும், நன்னடத்தையும் உள்ளவராகவும் இருக்க வேண்டும். தற்போது யார் யாரோ முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகின்றனர். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் ரத்து, மாணவர்களுக்கு மடிக் கணினியுன் இணைய தள இணைப்பு, கர்ப்பிணிகளின் பிரசவத்துக்கு ரூ.18 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களின் தேவையையும் நிறைவு செய்யும், தொலை நோக்கு திட்டங்களை கொண்ட அறிக்கை என்றார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில் தமிழக முதல்வர் சாதனை: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

மே 4,2016,

கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில் தமிழக முதல்வர் வரலாற்று சாதனை படைத்துள்ளார் என போடி தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

போடி அருகே சன்னாசிபுரம், அணைக்கரைப்பட்டி, மீ.விலக்கு, துரைராஜபுரம் காலனி, பொட்டல்களம், மீனாட்சிபுரம், சுந்தரராஜபுரம், அம்மாபட்டி, டொம்புச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:

 2011 தேர்தலின்போது தமிழக முதலமைச்சர் அறிவித்த திட்டங்களில் 100 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத பல திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தமிழக முதல்வர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

 போடி சட்டப்பேரவைத் தொகுதியில் 13 ஆயிரத்து 257 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ரூ.45.11 கோடி நிதியுதவியும், ரூ.13.39 கோடி மதிப்பீட்டில் திருமாங்கல்ய தங்கமும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 232 பெண் குழந்தைகளுக்கு ரூ.5.58 கோடி வைப்பு நிதி பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் பல திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின்போது போடி தொகுதி அ.தி.மு.க. செயலாளர் போதுமணி, ஒன்றிய செயலாளர் சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கல்வி வளர்ச்சிக்கு அதிமுக அரசு முக்கியத்துவம்: போடியில் அமைச்சர் பிரசாரம்

மே 3,2016,

அதிமுக ஆட்சியில் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று திங்கள்கிழமை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 போடி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தோப்புபட்டி, சடையால்பட்டி, திருச்செந்தூர், மாரியம்மன்கோயில்பட்டி, போடேந்திரபுரம், வீரபாண்டி, முத்துத்தேவன்பட்டி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியது: பெண்களின் சுகாதார, பொருளாதார, கல்வி முன்னேற்றத்துக்கு அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கியுள்ளது.  தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை மாணவ, மாணவிகளுக்கு தேவையான சலுகைகள் செய்து தரப்பட்டுள்ளன. போடி தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன், ஒன்றிய செயலர்கள் தேனி ஆர்.டி.கணேசன், போடி சற்குணம், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுப்பிள்ளை உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

கிராமங்களில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

மே 2,2016,

தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை போடி சட்டப் பேரவைதொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

பூமலைக்குண்டு, மல்லையகவுண்டன்பட்டி, காட்டுநாயக்கன்பட்டி, ஜங்கால்பட்டி, லட்சுமிபுரம், குப்பிநாயக்கன்பட்டி, வெங்கடாச்சலபுரம், நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் அமைச்சர் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன், மாவட்ட ஊராட்சிகள் தலைவர் சு.மகாலிங்கம், தேனி ஒன்றிய அதிமுக செயலர் ஆர்.டி.கணேசன், ஒன்றியக் குழு தலைவர் அம்சகோமதி, துணைத் தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

போடியில் அமைச்சர் பிரசாரம்: அதிமுகவில் 500 பேர் இணைந்தனர்

மே 2,2016,

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிற கட்சிகளைச் சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

போடி நகர் மற்றும் துரைராஜபுரம் காலனி, டொம்புச்சேரி, பாலார்பட்டி, கூழையனூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது, பல்வேறு சமுதாயத் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து ஆதரவு கோரினார்.

போடி துரைராஜபுரம் காலனியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பகுதியிலும் வாக்கு சேகரித்தார்.

அப்போது, கோடாங்கிபட்டி, சாலிமரத்துப்பட்டி, பண்ணைத்தோப்பு, தோப்புப்பட்டி, துரைராஜபுரம் காலனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 350 பேர், அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

  இதேபோல், போடி வினோபாஜி காலனி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து  பாமக போடி நகரத் தலைவர் முருகன் தலைமையிலும், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 150 பேர், அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

  நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார், தொகுதி செயலர் போதுமணி, நகரச் செயலர் பாலமுருகன், நகர்மன்றத் தலைவர் பழனிராஜ், ஒன்றியச் செயலர் சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேனி அருகே அமைச்சர் பிரசாரம்

மே 1,2016,

போடி தொகுதியில் தேனி அருகே உள்ள கோட்டைப்பட்டி, பள்ளபட்டி, சங்ககோணாம்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், கோபாலபுரம், அம்பாசமுத்திரம், கோவிந்தநகரம் ஆகிய கிராமங்களில் போடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கிராம மக்களின் கல்வி, சமுதாய, பொருளாதார, சுகாதார முன்னேற்றத்துக்காக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. போடி தொகுதியின் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் என்ற முறையில் உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றி வருகிறேன். எனது பணி தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார். தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் ப.ரவீந்திரநாத் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.டி.கணேசன், மாவட்ட ஊராட்சிகள் தலைவர் சு.மகாலிங்கம், நாகலாபுரம் ஊராட்சித் தலைவர் முருகேசன் ஆகியோர் உடன் சென்றனர்.

 

அதிமுக ஆட்சியில் 18-ஆம் கால்வாய் நீட்டிப்பு: அமைச்சர் பிரசாரம்

ஏப்ரல் 30, 2016,

போடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் அதிமுக ஆட்சியில் 18-ஆம் கால்வாய் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 போடி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி அருகே ஆதிபட்டியில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், வீருசின்னம்மாள்புரம், மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரங்கன்பட்டி, வலையபட்டி, கோடங்கிபட்டி, திருச்செந்தூர் காலனி, போடேந்திரபுரம் ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செயதார்.

  அப்போது அமைச்சர் பேசியது: போடி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.864 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போடி ஒன்றியத்துக்கு உள்பட்ட விவசாய நிலங்கள் பயனடையவும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும் அதிமுக ஆட்சியில் 18-ஆம் கால்வாய் திட்டம் 11 கி.மீ. தூரம் நீட்டிக்கப்பட்டு, கொட்டக்குடி ஆற்றுடன் இணைக்கப்பட உள்ளது. கொட்டகுடி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.   தமிழக மக்களின் நலன் காக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் முதல்வர் ஜெயலிதாவை மீண்டும் முதல்வராக்க அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.   தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் ப.ரவீந்திரநாத்குமார், போடி தொகுதி அதிமுக செயலர் போதுமணி, போடி ஒன்றிய அதிமுக செயலர் சற்குணம் ஆகியோர் உடன் சென்றனர்.

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Panneerselvam O AIADMK 95235
Thirteenth 2006-2011 Lakshmanan S DMK 51474
Twelfth 2001-06 Ramaraj.S ADMK 53410
Eleventh 1996-01 Sudalaimuthu, A. DMK 54893
Tenth 1991-96 Panneer Selvam V. ADK 63297
Ninth 1989-91 Jayalalitha, J. ADK(JL) 57603
Eighth 1984-89 K.S.M. Ramachandran INC 54231
Seventh 1980-84 Subramanian, K. M. S. ADK 50972
Sixth 1977-80 P. Ramadass ADK 29022
Fifth 1971-77 Surulivel M. DMK 35427
Fourth 1967-71 S.Srinivasan INC 34671

History of Theni District

Vaigai Dam

Theni District has been formed after bifurcation from erstwhile Madurai District as per G.O.Ms.No.679 Revenue Department Dated:25.07.96. Consequent on the bifurcation, one new Revenue Division with headquarters at Uthamapalayam and two new Taluks at Theni and Bodinaickanur were also created with effect from 01.01.97. Dr.K.Satyagopal IAS was the first collector for Theni District.

Theni Municipal town was only a firka headquarters till 31.12.96. Consequent on the formation of the new District, Theni Municipal Town has been upgraded as the Taluk and District headquarters from 01.01.97. It is mainly a commercial town. It is also known for its big weekly shandy on every Sunday. Vaigai dam and Kumbakarai falls in Periyakulam Taluk, Suruli falls in Uthamapalayam Taluk are the main places of attraction for tourists.

Gowmariamman Temple at Veerapandi Village (Theni Taluk) and saneeswara Bahavan Temple at Kuchanur Village (Uthamapalayam Taluk) are important and famous Hindu temples of this area. Kannagi temple which witnesses a single day festivity during Chitra Pournami day is in the interstate border.

 

Theni District MapTheni Area:

Area Sq. Km: 2,868

Theni Population:

Male: 625,683
Female: 620,216
Total: 1,245,899

Literacy Rates

Male: 85.03%
Female: 69.46%
Total: 77.26%