Cumbum

Cumbum is a state assembly constituency in Tamil Nadu. Elections were not held in 1957 and 1962.

Total Voters:

Male: 1, 29,304
Female: 1, 32,818
Transgender: 25
Total: 2, 62,147

 

கம்பத்தில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 11,2016,

கம்பம் நகராட்சி பகுதியில் திங்கள்கிழமை கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கம்பத்தில் முக்கிய பகுதிகளான காந்திதிடல், வேலப்பர் கோயில் விதி, அரசமரத் தெரு, புது பெரிய பள்ளிவாசல் பகுதி, கம்பம் மெட்டு சாலை, கே.கே.பட்டி சாலை, மணி நகரம், யாதவர் தெரு, தாத்தப்பன்குளம், நந்தகோபாலன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட 100 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப அட்டைதாரருக்கு இலவச செல்லிடப்பேசி, பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராமில் தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நறைவேற்றப்பட்டன. தேர்தலுக்கு பின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றபடும் எனக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

உத்தமபாளையம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 10,2016,

கோம்பை பேரூராட்சியில், கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். கோம்பை, ரெங்கநாதபுரம், பண்ணைப்புரம், மல்லிங்காபுரம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். 2016 ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என அவர் பேசினார். தொடர்ந்து மாலையில், அரண்மனை தெரு, தபால் அலுவலகத் தெரு, தேரடி உள்ளிட்ட அனைத்து வீதிகளுக்கும் சென்று சென்று வாக்கு சேகரித்தார்.

 

உத்தமபாளையம் பகுதியில் கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 8,2016,

உத்தமபாளையம் பகுதியில் சனிக்கிழமை கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் வாக்கு சேகரித்தார்.

உத்தமபாளையத்தில் உள்ள பி.டி.ஆர். காலனி, தென்னகர் காலனி, தென்றல் நகர், இந்திரா நகர், புறவழிச் சாலை சந்திப்பு, திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதி சென்று பிரசாரம் செய்தார். அப்போது, முதியோர் உதவித் தொகை ரூ.1500, அரசு பணியில் இருக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கிட 50 சதவீதம் மானியம் மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

அப்போது, மாவட்டச் செயலர் சிவக்குமார், உத்தமபாளையம் நகரச் செயலர் அப்துல்காதர் ஜெய்லானி உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

கம்பம் தொகுதி வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை ஆதரித்து சரத்குமார் பிரசாரம்

மே 7,2016,

முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் கூறினார்.

கம்பம் தொகுதி வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை ஆதரித்து உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு அவர் பிரசாரம் செய்து பேசியதாவது: மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்துக்கு அப்பதவிக்கான ஆற்றல், தகுதி, திறமை இல்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள அதிமுக தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன் முழுமையாக ரத்து, ரூ.40 ஆயிரம் கோடிக்கு விவசாயக் கடன் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்லிடப்பேசி உள்ளிட்ட நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதற்கு கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து திரைப்பட இயக்குநர்கள் வாக்கு சேகரிப்பு

மே 6,2016,

சின்னமனூரில் கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை ஆதரித்து இயக்குநர்கள் அனுமோகன், சக்தி சிதம்பரம் ஆகியோர் புதன்கிழமை வாக்கு சேகரித்தனர்.

அப்போது அனுமோகன் பேசும் போது, முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களை எவ்வித குறையுமின்றி காத்து வருவதாக கூறினார். அதன் பின் பேசிய சக்தி சிதம்பரம், தொடர்ந்து தமிழக மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்த மீண்டும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வர, அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

பிரசாரத்தில், சின்னமனூர் நகர் செயலர் சுரேஷ், ஒன்றியக் குழுத் தலைவர் பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு திரைப்பட இயக்குநர் வாக்கு சேகரிப்பு

மே 5,2016,

கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு ஆதரவாக, திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உத்தமபாளையம் ஒன்றியம் மற்றும் கம்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் அமைதியான ஆட்சியை கொடுக்கும் ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான். முதியோர் உதவித்தொகையை ரூ.1000ஆக உயர்த்தியதுடன் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். எனவே கம்பம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். அப்போது, தேவாரம் பேரூராட்சித் தலைவர் சீனிவாசன், உத்தமபாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் அப்துல்காதர் ஜெய்லானி மற்றும் ரகுமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.டி.கே.ஜக்கையனை ஆதரித்து நடிகர் செந்தில் பிரச்சாரம்

மே 3,2016,

கம்பம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை ஆதரித்து நடிகர் செந்தில் உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை இரவு பிரச்சாரம் செய்தார்.

 கம்பம் தொகுதியில் பல்வேறு பகுதியில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். கம்பம்,புதுப்பட்டி,அனுமந்தன்பட்டி,உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு வாக்கு சேகரித்தார். உத்தமபாளையம் கிராமச்சாவடியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பிரசாரம் செய்து பேசியது: அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது அம்மா உணவகம் திட்டம்.  அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் மூன்று வேளை உணவு வழங்கப்படுவதால்,லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள்  பயன்பெறுகின்றனர். எனவே முதல்வரின் நலத்திட்டங்கள் அனைத்தும் எழை மக்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்றார். இந்த பிரச்சாரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையதுகான், உத்தமபாளையம் நகரச் செயலர் அப்துல்காதர் ஜெய்லானி என பலர் கலந்துகொண்டனர்.

உத்தமபாளையம், சின்னமனூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 2,2016,

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே. ஜக்கையன், ஞாயிற்றுக்கிழமை உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார்.

 சின்னமனூர் ஒன்றியத்தில் காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, கன்னியம்பட்டி, ஓடைப்பட்டி, கன்னிச்சேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று காலை முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 மாலையில், உத்தமபாளையம் ஒன்றியத்தில் கோம்பை பேரூராட்சியிலுள்ள கிராமச் சாவடி, திரு.வி.க. தெரு, ராஜாஜி வீதி, கடை வீதி, ரெங்காநாதபுரம், பெரிய வீதி, காமராசர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று, அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தார்.   வாக்கு சேகரிப்பின்போது, மாவட்டச் செயலர் சிவக்குமார், உத்தமபாளையம் நகர் செயலர் அப்துல் காதர் ஜெய்லானி, கோம்பை பேரூராட்சி துணைத் தலைவர் பவித்ரா கண்ணன் உள்ளிட்ட பலர் வேட்பாளருடன் சென்றிருந்தனர்.

கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30, 2016,

கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவர், வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்த நிலையில், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இவருக்கு அதிமுகவினர் வரவேற்பளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது, மாவட்டச் செயலர் சிவக்குமார், முன்னாள் எம்.பி. சையதுகான், உத்தமபாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல்காதர் ஜெய்லானி உள்ளிட்ட பலர் சென்றனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Eramakrishnan.N DMK 80307
Thirteenth 2006-2011 Ramakrishan N, DMK 81515
Twelfth 2001-06 Eramakrishnan N MDMK 50761
Eleventh 1996-01 Ramachandran O.R TMC(M) 56823
Tenth 1991-96 Ramachandran, O.R. TMC(M) 58628
Ninth 1989-91 O.R. Ramachandaran INC 59263
Eighth 1984-89 Eramakrishnan DMK 52509
Seventh 1980-84 S.Subburayar ADK 52228
Sixth 1977-80 Gopalan, R. T. ADK 47577
Fifth 1971-77 R. Chandrasekharan ADK 34902
Fourth 1967-71 Gopal K. P. NCO 34483
Third 1961-67 Rajangam DMK 41440

History of Theni District

Vaigai Dam

Theni District has been formed after bifurcation from erstwhile Madurai District as per G.O.Ms.No.679 Revenue Department Dated:25.07.96. Consequent on the bifurcation, one new Revenue Division with headquarters at Uthamapalayam and two new Taluks at Theni and Bodinaickanur were also created with effect from 01.01.97. Dr.K.Satyagopal IAS was the first collector for Theni District.

Theni Municipal town was only a firka headquarters till 31.12.96. Consequent on the formation of the new District, Theni Municipal Town has been upgraded as the Taluk and District headquarters from 01.01.97. It is mainly a commercial town. It is also known for its big weekly shandy on every Sunday. Vaigai dam and Kumbakarai falls in Periyakulam Taluk, Suruli falls in Uthamapalayam Taluk are the main places of attraction for tourists.

Gowmariamman Temple at Veerapandi Village (Theni Taluk) and saneeswara Bahavan Temple at Kuchanur Village (Uthamapalayam Taluk) are important and famous Hindu temples of this area. Kannagi temple which witnesses a single day festivity during Chitra Pournami day is in the interstate border.

 

Theni District MapTheni Area:

Area Sq. Km: 2,868

Theni Population:

Male: 625,683
Female: 620,216
Total: 1,245,899

Literacy Rates

Male: 85.03%
Female: 69.46%
Total: 77.26%