Tiruchendur (State Assembly Constituency)

Tiruchendur assembly constituency is part of Tiruchendur (Lok Sabha constituency) till 2009.Later from May 2009, after dissolution of Tiruchendur Lok Sabha constituency this constituency was aligned with Tuticorin Lok Sabha constituency.

Total Voters:

Male 1, 09,797
Female: 1, 14,163
Transgender 13
Total 2, 23,973

AIADMKCandidate for Tiruchendur Assembly Election 2016 – Mr. Sarathkumar

Tiruchendur AIADMK Candidate Mr.Sarathkumar

சிலம்பம் விளையாடி சரத்குமார் வாக்கு சேகரிப்பு

மே 14,2016,

திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சமக வேட்பாளர் ஆர்.சரத்குமார், உடன்குடி நகரப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

எம்ஜிஆர் நகரில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய அவர், சிதம்பரத்தெரு, நயினாப்பிள்ளைத் தெரு,கூளத்தெரு,பெருமாள்புரம், வைத்திலிங்கபுரம், சிவலூர், சந்தையடியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் நின்றபடி சென்று வாக்கு சேகரித்தார்.

கிறிஸ்தியாநகரத்தில் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடமிருந்து கம்பை கேட்டுப் பெற்று, சுழற்றி ஆடிய அவர், சிலம்பம் குறித்து பேசி அவர்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் உடன்குடி ஒன்றிய அதிமுக செயலர் அம்மன் நாராயணன், சமக ஒன்றியச் செயலர் தயாளன், அதிமுக நகரச் செயலர் கோயில்மணி, சமக நகரச் செயலர் ஆனந்தன், உடன்குடி பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி உள்பட பலர்  வாக்கு சேகரித்தனர்.

சரத்குமாரை ஆதரித்து நடிகர் குண்டு கல்யாணம் பிரசாரம்

மே 05,2016,

திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான சரத்குமாரை ஆதரித்து நடிகர் குண்டு கல்யாணம் ஆறுமுகனேரி, ஆத்தூர் மற்றும் காயல்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். காயல்பட்டினம் அதிமுக நகரச் செயலர் எம்.ஜே.செய்யது இப்ராகீம், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் எல்.எஸ்.அன்வர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

புன்னைக்காயலில் சரத்குமார் பிரசாரம்

மே 02,2016,

திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆத்தூர், உடன்குடி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அவர் தெற்கு ஆத்தூர், நரசன்விளை, கொழுவைநல்லூர், மரந்தலை, வெள்ளக்கோவில், சுகந்தலை, புன்னைச்சாத்தான்குறிச்சி மற்றும் மேலாத்தூர் ஊராட்சி பகுதிகளிலும் வீதிவீதியாகச்சென்று வாக்கு சேகரித்தார்.

புன்னைக்காயலில் அவர் பேசியது: புன்னைக்காயல் முகத்துவாரப் பிரச்னையைத் தீர்க்க முதல்வர் ஜெயலலிதா ரூ. 18 கோடி ஒதுக்கியுள்ளார். தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் முகத்துவாரப் பிரச்னை தீர்க்கப்படும் என்றார்.

அவருடன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, அதிமுக மாவட்டப் பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட மீனவரணிச் செயலர் டார்சன், ஆத்தூர் பேரூராட்சித் தலைவர் எம்.பி. முருகானந்தம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர்  சுப்பிரமணியன், சமக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குரும்பூர் பகுதிகளில் சரத்குமார் வாக்கு சேகரிப்பு

மே 01,2016,

குரும்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி சமக வேட்பாளர் நடிகர் சரத்குமார் வாக்கு சேகரித்தார்.

வெள்ளக்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு நலத் திட்டங்களைக் கூறி அவர் வாக்கு சேகரித்தார். அவருடன், அதிமுக, சமக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

அடுத்த தலைமுறையைப் பற்றியும் சிந்திப்பவர் முதல்வர் ஜெயலலிதா: சரத்குமார்

ஏப்ரல் 29,2016,

அடுத்த தலைமுறையைப் பற்றியும் சிந்திக்கக் கூடியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என, சமக தலைவர் ஆர். சரத்குமார் கூறினார்.

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியனை ஆதரித்து மடத்தூர், அண்ணாநகர், திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மேலும் பேசியது:

தமிழகத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். அனைத்து இடங்களிலுமே அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 5 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுவரும் நல்லாட்சி தொடர வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.

கூடா நட்பு கேடாய் முடியும் எனப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதிக் கலவரம் தூண்டப்படுவதாகக் கூறி தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, அதற்கான ஆதாரங்கள் இருந்தால் காவல் நிலையத்திலோ, தேர்தல் ஆணையத்திடமோ அளித்திருக்கலாம். அடுத்த தலைமுறையைப் பற்றியும் சிந்தித்து அவர்களுக்குத் தேவையான திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த தேர்தலில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும், 110 விதியின் கீழ் அறிவித்த 185 அறிவிப்புகளையும் அவர் நிறைவேற்றியுள்ளார்.

தூத்துக்குடி மாநகருக்கு முதன் முதலில் குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டவர் முதல்வர் ஜெயலலிதா. எனவே, அவரை மீண்டும் முதல்வராக்க அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.

ஆர்.சரத்குமாரை ஆதரித்து உடன்குடி பகுதியில் நடிகர் பூங்காவனம் பிரசாரம்

ஏப்ரல் 29,2016,

திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்ஆர்.சரத்குமாரை ஆதரித்து, தொலைக்காட்சி நடிகர் பூங்காவனம் உடன்குடி பகுதியில் பிரசாரம் செய்தார். குலசேகரன்பட்டினத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர், உடன்குடி பிரதானபஜார், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சாதனைகளைக் கூறி அவர் வாக்கு சேகரித்தார். உடன்குடி ஒன்றிய அதிமுக செயலர் அம்மன் நாராயணன், சமக ஒன்றியச் செயலர் தயாளன், நகர உள்பட பலர் உடன் சென்றனர்.

 

குரும்பூர் பகுதிகளில் சரத்குமார், ராதிகா வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 25,2016,

குரும்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார், ராதிகா ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

சமக மகளிரணித் தலைவி ராதிகா வெள்ளக்கோவில் குரும்பூர், சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அவருடன், சமக மாவட்டச் செயலாளர் சுந்தர், ஆத்தூர் பேரூராட்சித் தலைவர் எம்.பி. முருகானந்தம், அதிமுக ஆழ்வை ஒன்றியச் செயலர் ஏ.எம்.எஸ். ஷேக்தாவூது, ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவன் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர். நல்லூரில் வேட்பாளர் சரத்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 

காயல்பட்டினத்தில் சரத்குமார் பிரசாரம்

ஏப்ரல் 24,2016,

காயல்பட்டினத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக கூட்டணி சமக வேட்பாளர் சரத்குமார், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில், சமக மாவட்டச் செயலர் சுந்தர், நகரச் செயலர் அப்துல் அஜீஸ், ஒன்றியச் செயலர் ரவி, மாணவர் அணி இணைச் செயலர் குரூஸ்திவாகரன், மகளிரணி துணைச் செயலர் முத்துசூர்யா, இளைஞரணி மாவட்டச் செயலர் வில்சன், அதிமுக ஒன்றியச் செயலர் ராமச்சந்திரன், நகரச் செயலர் செய்யது இப்ராகிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், பாஸ்நகர், அவகாபுரி, எல்.ஆர்.நகர், லட்சுமிபுரம், கீழலட்சுமிபுரம், ரத்னாபுரி, மங்களவிநாயகர் கோயில் தெரு, உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமான்புதூர், அருணாசலபுரம், கொம்புத்துறை, சிங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரத்குமார் வாக்கு சேகரித்தார்.

 

திருச்செந்தூரில் ராதிகா பிரசாரம்

ஏப்ரல் 24,2016,

திருச்செந்தூரில் சமத்துவ மக்கள் கட்சி மகளிரணிச் செயலர் ராதிகா சரத்குமார் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

திருச்செந்தூர் பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான ஆர்.சரத்குமாரை ஆதரித்து, அவர் திருச்செந்தூர் கந்தசாமிபுரத்தில் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது, அதிமுக ஒன்றியச் செயலர் மு.ராமச்சந்திரன், கோயில் தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, முன்னாள் ஒன்றியச் செயலர் அமலி டி.ராஜன், சமக தென்மண்டல அமைப்புச் செயலர் என்.சுந்தர், மாவட்ட இளைஞரணிச் செயலர் வில்சன், ஒன்றியச் செயலர் அ.ரவிகுமார், நகரச் செயலர் ஜி.அன்னையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆறுமுகனேரி: ஆத்தூர் மற்றும் அருகேயுள்ள செல்வன்புதியனூர், புதுநகர், தலைப்பண்ணை, தலைவன்வடலி, கீரனூர், கொழுவைநல்லூர், வெள்ளக்கோவில், சுகந்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரத்குமாருக்கு ஆதரவாக, ராதிகா பிரசாரம் மேற்கொண்டார். பல்வேறு தெருக்களிலும் பொதுமக்களை சந்தித்து, வீதிவீதியாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். அவருடன், அதிமுக மற்றும் சமக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

ஏப்ரல் 24,2016,

உடன்குடியில், அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிமுக ஒன்றியச் செயலர் அம்மன் நாராயணன் தலைமை வகித்தார். சமக தென் மண்டலச் செயலர் சுந்தர், சமக மாநில மகளிரணிச் செயலர் பாகிரதி, மாநில பனைவெல்லம் தும்பு கூட்டுறவு இணையத் தலைவர் தாமோதரன், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் செல்லத்துரை, அதிமுக நகரச் செயலர் கோயில்மணி, சமக ஒன்றியச் செயலர் தயாளன், ஒன்றிய இளைஞரணிச் செயலர் சுதாகர், ஊராட்சி ஒன்றியத் தலைவி ஜெ.மல்லிகா, பேரூராட்சித் தலைவி ஆயிஷா கல்லாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார், தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசினார்.

இதில், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் மூர்த்தி, மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் எரேமியஸ், மாவட்ட ஊராட்சித் தலைவர் ரவிகுமார் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

 

நாசரேத்தில் சரத்குமார், சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

நாசரேத்தில் சரத்குமார், சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்புஏப்ரல் 23, 2016

நாசரேத்தில் சரத்குமார் சைக்கிளில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

2-வது நாள் பிரசாரம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் போட்டியிடுகிறார். அவர் நாசரேத் வெள்ளரிக்காயூரணி தேவர் சிலை அருகில் 2-வது நாள் பிரசாரத்தை நேற்று மாலையில் தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரகாசபுரம், என்.டி.என். தெரு, ரெயில்வே கேட் அருகில் சரத்குமார் பிரசாரம் செய்தார்.

தொடர்ந்து அவர் மணிநகரில் சைக்கிளில் சென்றவாறும், பின்னர் இளைஞரைப் போன்று ஓடோடிச் சென்றும் வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வழிநெடுகிலும் ச.ம.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தனர்.

முதன்மை தொகுதியாக…

தொடர்ந்து திருவள்ளுவர் காலனி, கந்தசாமிபுரம், மில் ரோடு, கே.வி.கே. நகர், மோசஸ் தெரு, வகுத்தான்குப்பன், ஏ.ஐ. பள்ளி, ஒய்.எம்.சி.ஏ. பகுதி, அகப்பைகுளம், வாழையடி, மாதாவனம், கைலாசபுரம், கொர்நேலியஸ் தெரு, புனித லூக்கா ஆஸ்பத்திரி, சந்தி ஆகிய பகுதிகளில் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்காக உழைப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். நான் வானில் இருந்து வந்த நட்சத்திரம் கிடையாது. இந்த மண்ணின் மைந்தன். தென்காசி தொகுதியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினேன். அதேபோன்று இங்கும் உங்களில் ஒருவனாக உங்களோடு என்றும் இருப்பேன். திருச்செந்தூர் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனே நிறைவேற்றுவேன்.

தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக உள்ளது. அதேபோன்று திருச்செந்தூர் தொகுதியையும் முதன்மை தொகுதியாக மாற்றி காட்டுவேன். முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் பேசினார்.

பின்னர் அவர் நாசரேத் கதீட்ரலில் சென்று, சபை ஊழியர் சர்ச்சிலிடம் ஆசி பெற்றார். கதீட்ரல் வளாகத்தில் உள்ள நாசரேத்தின் தந்தை என்று அழைக்கப்படும் போதகர் மர்காஷிஸ் கல்லறைக்கு சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ஆசீர்வாதபுரம், ஏதேன் தெரு, ஸ்டேன் தெரு, டேனியல் தெரு வழியாக பஸ் நிலையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

 

நல்லாட்சி தொடர வாய்ப்பு தாருங்கள்: நாசரேத்தில் சரத்குமார் பிரசாரம்

ஏப்ரல் 23,2016,

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வாய்ப்பு தாருங்கள் என நாசரேத்தில் பிரசாரம் மேற்கொண்ட சமக தலைவரும், வேட்பாளருமான ஆர்.சரத்குமார் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அவர், நாசரேத் வெள்ளரிக்காயூரணி தேவர் சிலை அருகில் 2ஆவது நாள் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினார்.

பிரகாசபுரம், என்.டி.என். தெரு, ரெயில்வே கேட், மணி நகர், திருவள்ளுவர் காலனி, கந்தசாமிபுரம், மில் ரோடு, கே.வி.கே. நகர், மோசஸ் தெரு, வகுத்தான்குப்பன், ஏ.ஐ. பள்ளி, ஒய்.எம்.சி.ஏ. பகுதி, அகப்பைகுளம், வாழையடி, மாதாவனம், கைலாசபுரம், கொர்நேலியஸ் தெரு, புனித லூக்கா ஆஸ்பத்திரி, சந்தி உள்ளிட்ட பகுதிகளில் அவர் சைக்கிளில் சென்றவாறும், நடந்து சென்றும் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது: தென்காசி தொகுதியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினேன். அதேபோல், மண்ணின் மைந்தனான நான் திருச்செந்தூர் தொகுதியிலும் உங்களோடு ஒருவனாக இருந்து, தொகுதிக்கு தேவையான திட்டங்களை உடனே நிறைவேற்றுவேன். முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார் அவர்.

பின்னர் நாசரேத் கதீட்ரல் வளாகத்தில் உள்ள போதகர் மர்காஷிஸ் கல்லறைக்கு சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஆசீர்வாதபுரம், ஏதேன் தெரு, ஸ்டேன் தெரு, டேனியல் தெரு வழியாக மக்களிடம் வாக்குகள் சேகரித்த அவர், நாசரேத் பேருந்து நிலையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

பிரசாரத்தில், ஆழ்வார்திருநகரி ஒன்றியக்குழுத் தலைவர் விஜயகுமார், மாவட்ட சமக செயலர் சுந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

சரத்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் தயார்:எர்ணாவூர் நாராயணன்

ஏப்ரல் 21, 2016,

அதிமுக தலைமை உத்தரவிட்டால், திருச்செந்தூரில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் தயார் என்றார் சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர்- தலைவர் எர்ணாவூர் நாராயணன்.

பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கழக நிர்வாகிகளை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். புதன்கிழமை காலை தூத்துக்குடியில் ஆலோசனை நடத்திய பிறகு திருநெல்வேலிக்கு பிற்பகலில் வந்த அவர், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், அவர் பேசியதாவது: சமத்துவ மக்கள் கழகத்தைத் தொடங்கிய 2 நாளிலேயே அதிமுகவின் பொதுச் செயலர் ஜெயலலிதா, நம்மை அழைத்துப் பேசினார். தேர்தலில் ஆதரவு தெரிவித்தோம். வேறு எந்தக் கட்சிக்கும் கிடைக்காத அங்கீகாரம் இதுமட்டுமே.

போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்காக முழுமையாக பிரசாரம் செய்யப்படும்.

அதிமுக அரசின் 5 ஆண்டுகால திட்டங்களே முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும், குறிப்பாக மாணவர் – மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம். இத்திட்டத்தால் பயனடைந்த புதிய வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவுக்கே வாக்களிப்பர். இத்தேர்தலில் அதிமுக வரலாற்று சாதனை நிகழ்த்தும்.

அதிமுகவின் தோழமைக் கட்சியான சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருச்செந்தூரில் சரத்குமார் போட்டியிடுகிறார். அதிமுக தலைமை உத்தரவிட்டால் அங்கும் தயக்கமின்றி பிரசாரம் செய்வோம் என்றார் அவர்.

தலைமை நிலையச் செயலர் தங்கமுத்து, அமைப்புச் செயலர் கணேசன், துணைச் செயலர் விநாயகமூர்த்தி, மாவட்டச் செயலர்கள் முனிராஜ், அந்தோணிதாஸ், முத்துக்குட்டி, நவமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

உடன்குடி ஒன்றியப் பகுதியில் சரத்குமார் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 21,2016,

திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஆர்.சரத்குமார் உடன்குடி ஒன்றியப் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

கல்லாமொழியில் பிரசாரத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து குலசேகரன்பட்டினத்தில் பல்வேறு பகுதிகள், அனுகூலபுரம், மணப்பாட்டின் பல்வேறு பகுதிகள், புதுக்குடியேற்று, அமராபுரம், கூடல்நகர், காரங்காடு, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு, வேடகோட்டவிளை, ராமசாமிபுரம், கந்தபுரம், ஞானியார்குடியிருப்பு, உதிரமாடன்குடியிருப்பு, பிறைகுடியிருப்பு, சுப்பிரமணியபுரம், வெங்கட்ராமானுஜபுரம், தாங்கையூர், ஆண்டிவிளை, தேரியூர், முத்துகிருஷ்ணாபுரம், செட்டிபாத்து, சித்தவிளை, மருதூர்கரை, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அவருடன் தமிழ்நாடு பனைவெல்லக் கூட்டுறவு இணைய மாநிலத் தலைவர் தாமோதரன், சமக தென்மண்டலத் தலைவர் சுந்தர், உடன்குடி ஒன்றிய அதிமுக செயலர் அம்மன் நாராயணன், ஒன்றிய சமக செயலர் தயாளன், துணைச் செயலர் பட்டுராஜன், உடன்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜதுரை, பேரூராட்சித் தலைவி ஆயிஷாகல்லாசி, துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மனோஜ், உடன்குடி நகரஅதிமுக செயலர் கோயிலமணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் சமுதாய தலைவர்களை சந்தித்து திருச்செந்தூரில் சரத்குமார் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 20, 2016,

திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஆர்.சரத்குமார் செவ்வாய்க்கிழமை  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர், நகரப் பகுதியில் உள்ள வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் சமுதாய தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதில், சமக தென் மண்டல செயலர் என்.சுந்தர், ஒன்றியச் செயலர் அ.ரவிக்குமார், திருச்செந்தூர் கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் க.விஜயகுமார். ஒன்றிய அதிமுக செயலர் மு.ராமச்சந்திரன், அதிமுக நகரச் செயலர் வி.எம்.மகேந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, திருச்செந்தூர் நகரச் செயலர் ஜி.அன்னையா, கானம் நகரச் செயலர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

என்னை வெற்றி பெறச்செய்தால் “திருச்செந்தூரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” சரத்குமார் பேச்சு

திருச்செந்தூர், ஏப்ரல் 19,2016

என்னை வெற்றி பெறச் செய்தால் திருச்செந்தூரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்“ என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பேசினார்

செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.- ச.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. முன்னிலை வகித்தார். ச.ம.க. தென்மண்டல செயலாளரும், மாவட்ட செயலாளருமான என்.சுந்தர் வரவேற்றுப் பேசினார் கூட்டத்தில் ச.ம.க. தலைவர் ஆர்.சரத்குமார் பேசியதாவது சிறப்பான  ஆட்சி முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அவர் கடந்த தேர்தலில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். அதனால்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, இந்திய அளவில் 3-வது பெரிய கட்சியாக திகழ்கிறது. முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் பயன் அடைந்து உள்ளனர். மாணவர்கள் நன்றாக கல்வி கற்பதற்காக இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன தி.மு.க. ஆட்சியில் இருளில் மூழ்கி கிடந்த தமிழகத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார். கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறி காங்கிரஸ் கட்சியின் உறவை முறித்துக் கொண்டவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி. தற்போது அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளார். இதுவும் அவர்களுக்கு கேடாக முடிவது உறுதி

முன் மாதிரியான தொகுதி

நான் தென்காசி தொகுதியில் அறிவித்த வாக்குறுதிகளில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். சட்டசபையில் அதிக கேள்விகள் கேட்டு பேசிய உறுப்பினர் நான்தான். எனக்கு அரசியல் ஞானம் உண்டு. திருச்செந்தூர் தொகுதியில் உங்களோடு இருந்து செயல்பட்டு, திருச்செந்தூர் தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர, வருகிற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்

இவ்வாறு ச.ம.க. தலைவர் சரத்குமார் பேசினார்.

 

திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமாரை ஆதரித்து ராதிகா 3-வது நாளாக பிரசாரம் காயல்பட்டினம் தர்காவில் பிரார்த்தனை செய்தார்

ஆர்.சரத்குமாரை ஆதரித்து, 3-வது நாளாக நடிகை ராதிகா பிரசாரம் திங்கள் ஏப்ரல் 18,2016,

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமாரை ஆதரித்து, 3-வது நாளாக நேற்று நடிகை ராதிகா பிரசாரம் செய்தார். காயல்பட்டினம் தர்காவில் பிரார்த்தனையும் செய்தார்

ராதிகா சரத்குமார்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் நேற்று மாலையில் காயல்பட்டினம் ஓடக்கரையில் 3-வது நாள் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர் காயல்பட்டினம் ரெட்ஸ்டார் சங்கம், கடைபள்ளி தெரு, சிங்கித்துறை, கோமான் தெரு, அருணாசலபுரம், கொம்புத்துறை, அருசியா பள்ளி, பைபாஸ் ரோடு, ரத்தினாபுரி, கீழ லட்சுமிபுரம், பேயன்விளை, ஆறுமுகநேரி, பெருமாள்புரம், செல்வராஜபுரம், காமராஜர்புரம், அடைக்கலாபுரம், ராணிமகாராஜபுரம், சண்முகபுரம் வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது

ஏழை மக்களின் நலனுக்காக

தமிழகத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது இந்த நல்லாட்சி தொடர வேண்டும், முதல்- அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் அரியணையில் ஏற வேண்டும். என்னுடைய கணவர் சரத்குமார் கடந்த 5 ஆண்டுகளாக தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி உள்ளார். அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி தந்து உள்ளார். சட்டசபையில் அதிக கேள்வி கேட்டு பேசிய உறுப்பினர் சரத்குமார்தான். அதேபோன்று திருச்செந்தூர் தொகுதியிலும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றுவது உறுதி

அமோக வெற்றி

முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்களின் நலனுக்காக எப்போதும் சிந்தித்து புதிய திட்டங்களை நிறைவேற்றி தருகிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, ச.ம.க. தலைவர் சரத்குமாரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு நடிகை ராதிகா சரத்குமார் பேசினார்

தர்காவில் பிரார்த்தனை

அவர் காயல்பட்டினம் தைக்கா தெருவில் உள்ள சாகிபு அப்பா தர்காவில் சரத்குமாரின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார் பிரசாரத்தில் ஜெயசிங் தியாகராஜ்  நட்டர்ஜி  எம்.பி., ச.ம.க. மாவட்ட செயலாளர் என்.சுந்தர், காயல்பட்டினம் நகர செயலாளர் அஜிஸ், அ.தி.மு.க. நகர செயலாளர் செய்யது இப்ராகிம், ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்வர், முன்னாள் நகர செயலாளர் மவுலானா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக, ஆறுமுகநேரியில் நகர அ.தி.மு.க. செயலாளர் கே.கே.அரசகுரு, நகர ச.ம.க. செயலாளர் சீமான் ஆகியோர் தலைமையில் ராதிகா சரத்குமாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

“அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது பிரசாரத்தில் நடிகை ராதிகா பேச்சு

திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் நடிகை ராதிகாஆத்தூர், ஏப்.17

“அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது“ என்று திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் நடிகை ராதிகா பேசினார்

2-வது நாள் பிரசாரம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா நேற்று மாலையில் புன்னக்காயலில் இருந்து 2-வது நாள் பிரசாரத்தை தொடங்கினார் அவர் சேர்ந்தபூமங்கலம், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், வரண்டியவேல், மைக்கண்நாடார் குடியிருப்பு, சுயம்புலிங்கபுரம், குரும்பூர், அங்கமங்கலம், குருகாட்டூர், தென்திருப்பேரை, மணல்மேடு, வெள்ளிரிக்காயூரணி, பிரகாசபுரம், நாசரேத் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அமைதி பூங்கா அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். யாரும் எதிர்பார்க்காத பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார் தி.மு.க. கட்சியால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. கச்சத்தீவை மீட்போம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறுவது வேடிக்கையானது. தி.மு.க. ஆட்சியில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முடிவு தடுமாற்றத்தில்தான் முடியும்.

நல்லாட்சி தொடர

தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சி தொடர வேண்டும். என்னுடைய கணவர் படித்தவர், பண்புள்ளவர், எதையும் சிந்தித்து பார்த்து செயல்படக் கூடியவர். நான் வெளியூரில் இருந்து வந்தவள் அல்ல. இது என்னுடைய உறவினர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.என்னுடைய கணவர் தென்காசி தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, சரத்குமாரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ராதிகா பேசினார்

பிரசாரத்தில் ச.ம.க. மாவட்ட செயலாளர் என்.சுந்தர், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் எம்.பி.முருகானந்தம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஷேக் தாவூது, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் விஜயகுமார், தெற்கு ஆத்தூர் பஞ்சாயத்து செயலாளர் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய அவை தலைவர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ஜெயலலிதா  நிறைவேற்றிய  திட்டங்களால் சரத்குமார்  வெற்றி  பெறுவது  உறுதி திருச்செந்தூர் தொகுதியில் ராதிகா பிரசாரம்

நடிகை ராதிகா சனி ஏப்ரல் 16,2016,

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களால் திருச்செந்தூரில் சரத்குமார் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது’’ என்று தேர்தல் பிரசாரத்தில் ராதிகா பேசினார்.

ராதிகா சரத்குமார் பிரசாரம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் குலசேகரன்பட்டினம் வடக்கூர் அண்ணா சிலை பகுதியில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

பின்னர் அவர் அனுகூலபுரம், மணப்பாடு, புதுக்குடியேற்று, உடன்குடி, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, மானாடு, மெஞ்ஞானபுரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

குழப்பமாக கூட்டணி

தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அது அவர்களின் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்டது. விஜயகாந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் குழப்பமே மிஞ்சி உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எத்தனை பேர் எதிர்த்தாலும், அவர்களுக்கு தோல்விதான் கிடைக்கும். அவர் தனி ஒரு பெண்ணாக நின்று சாதனை படைத்து வருகிறார். அவருக்கு நிகர், அவர் தான், வேறு யாரும் கிடையாது. அவர் முதல்- அமைச்சராக நிறைவேற்றிய நலத்திட்டங்கள் ஏராளம்.

நமது முதல்- அமைச்சர் எதற்கும் அஞ்சாதவர். அவர் படித்தவர், பண்புள்ளவர், தாயுள்ளம் கொண்டவர்.

தூண்டில் வளைவு பாலம்

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறும் நல்லாட்சி தொடர, இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். என்னுடைய கணவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். சில திட்டங்களுக்கு தனது சொந்த பணத்தையே செலவழித்து நிறைவேற்றி உள்ளார். அதேபோன்று திருச்செந்தூரிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றுவது உறுதி.

மீனவர்கள் என் மீது மிகுந்த பாசம் வைத்து உள்ளனர். மணப்பாட்டில் அனைத்து தெருக்களின் வழியாகவும் வருமாறு என்னிடம் உரிமையுடன் கேட்டுக் கொண்டனர். வழிநெடுகிலும் அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களால், திருச்செந்தூரில் என்னுடைய கணவரின் வெற்றி உறுதியாகிவிட்டது. மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மணப்பாட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும்.

தொண்டர்கள் மிகுந்த கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. அதேபோன்று ச.ம.க.விலும் அதிக தொண்டர்கள் உள்ளனர். ஆனால் தொண்டர்கள் இல்லாமல், தலைவர்கள் மட்டுமே உள்ள கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அ.தி.மு.க., ச.ம.க. தொண்டர்கள் இணைந்து உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். விரைவில் என்னுடைய கணவரும் உங்களுடன் இணைந்து முழு மூச்சாக தேர்தல் பணியில் ஈடுபடுவார்.

இவ்வாறு ராதிகா சரத்குமார் பேசினார்.

 

திருச்செந்தூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார் அ.தி.மு.க. வேட்பாளர் சரத்குமார்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.

நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்தக் கட்சித் தலைவர் சரத்குமார் போட்டியிடுகிறார்.

இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் வழிபட்டனர். தொடர்ந்து, சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னதியில் சரத்குமார் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அதன் பின்னர், காலை 10.30 மணிக்கு கோயில் வாசல் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
தேர்தல் அலுவலகம் திறப்பு: திருச்செந்தூர் சன்னதித் தெருவில் தேர்தல் அலுவலகத்தை சரத்குமார் திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பளித்துள்ளார். அவரது ஆலோசனையின்பேரில், திருச்செந்தூரில் தேர்தல் அலுவலகம் கூட்டணிக் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடாமல், திருச்செந்தூர் தொகுதியில் நான் போட்டியிடுவதை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். தென்காசியில் நான் என்னென்ன பணிகள் செய்தேன் என்பது அங்குள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தொகுதியில் எல்லாரும் பெருமைப்படும்படி பணியாற்றுவேன். இந்தத் தொகுதியில் உள்ள மக்கள் தேவைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.

அதனடிப்படையில் மக்கள் தேவைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றார் அவர்.

பிரசாரம் தொடக்கம்: அதைத் தொடர்ந்து, திருச்செந்தூர் சன்னதித் தெரு, ரதவீதிகள் வழியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Anitha R Radhakrishnan DMK 68741
Thirteenth 2006-2011 Anitha R. R. DMK 75223
Twelfth 2001-06 Anitha R.Radhakrishnan AIADMK 58600
Eleventh 1996-01 Anitha.R. Radhakrishnan. ADMK 52990
Tenth 1991-96 S. Jennifer Chandran DMK 59206
Ninth 1989-91 Chelladurai A. ADK 54442
Eighth 1984-89 Kandasamy, K.P. DMK 42084
Seventh 1980-84 Subramanai Anthithan Aliassubramanian ADK 45953
Sixth 1977-80 Kesava Athithan, S. ADK 35499
Fifth 1971-77 R. Amirtharaj ADK 20871
Fourth 1967-71 Edmund DMK 39974
Third -67 E.Fernando DMK 39619

History of Thoothukudi District

Panchalankurichi - Kattapomman

Tuticorin, also known as Thoothukudi is a port city and a Municipal Corporation and an industrial city in Thoothukudi district of the Indian state of Tamil Nadu. The city lies in the Coromandel Coast off Bay of Bengal. Thoothukudi is the headquarters of Thoothukudi District. It is located about 590 kilometres (367 mi) south of Chennai and 190 kilometres (118 mi) northeast of Thiruvananthapuram (Trivandrum). According to Confederation of Indian Industry, Tuticorin has the second highest Human Development Index in Tamil Nadu next to Chennai. Tuticorin City serves as the headquarters of Tamilnad Mercantile Bank Limited. Major educational establishments in the city include Thoothukudi Government Medical College, Fisheries College and Research Institute, Marine Training Academy, V.O.C. Arts & Science College, Government Polytechnic College, and Anna University Tuticorin Campus.Tuticorin Port is one of the Fastest growing Major Ports in India.Tuticorin is an “Emerging Energy and Industrial hub of South India”.

Thoothukudi is known as “Pearl City” due to the pearl fishing carried out in the town. It is a commercial seaport which serves the inland cities of Southern India and is one of the sea gateways of Tamil Nadu. It is also one of the major seaports in India with a history dating back to the 6th century AD. The city is believed to be of significant antiquity and has been ruled, at different times, by the Early Pandyas, Medieval Cholas, Later Cholas, Later Pandyas, Ma’bar Sultanate, Tirunelveli Sultanate, Vijayanagar Empire, Madurai Nayaks, Chanda Sahib, Carnatic kingdom, Portuguese, Dutch and the British. Thoothukudi was settled by the Portuguese, Dutch and later by the British East India Company. The city is administered by a Thoothukudi Municipal Corporation covering an area of 90.663 km2 (35.005 sq mi) and had a population of 237,830 in 2011. The urban agglomeration had a population of 410,760 as of 2011.

Thoothukudi became the citadel of freedom struggle in the early of the 20th century. It was in Thoothukudi that the illustrious patriot , V.O.Chidambaram established the first swadesi Stream Navigation Company, sailing the first steamer S.S.Gaelia to Thoothukudi on 1st June 1907.

The majority of the people of the city are employed in salt pans, sea-borne trading, fishing, and tourism. A major attraction in the city is Our Lady of Snows Basilica, a 16th-century site. The 21 islands between Thoothukudi and Rameswaram shores in the Gulf of Mannar are noted as the first Marine Biosphere Reserve of India, and have around 36,000 species of flora and fauna. This protected area is called Gulf of Mannar Marine National Park. Our Lady of Snows Basilica festival is celebrated annually during August. This and the Shiva temple festivals, e.g., Adi Amavasai, Sasti, and Chittirai chariot festivals – are the major festivals of the area. Roadways are the major mode of transport to Thoothukudi, while the city also has rail, air, and sea transport.

The salient features of the district include its lengthy,curvy and scenic sea coast which was an international cynosure in the days of yore for its pearl fishery; beautiful coastel villages with their sacred temples, churches and mosques like Tiruchendur, Manappadu and Kayalpattinam respectively, Adhichanallur, one of the cradles of the ancient civilizations, Korkai, an ancient port of the Sangam Pandyas,Kayal, the confluence of the river Tamiraparani with the Bay of Bengal,one of the five illustrious rivers of Tamilnadu, Panchalamkurichi, the capital of Veerapandiya Kattabomman, an early martyr, for the cause of freedom, Ettayapuram, the birth place of the great poet Subramanya Bharathi, Ottapidaram the home town of V.O.Chidambaram Pillai,who dared to sail ships as a measure to combat British imperialism;Maniyachi, where Vanchinathan assassinated Ashe, the British Collector for this high –handedness against the leaders during Swadeshi Movement; Kulasekarapattinam and Kurumbur where patriots showed their anger against alien rule ,temple towns like Srivaikundam, Meignanapuram, one of the cradles of Christianity, Thoothukudi, besides being a major port, the earliest settlement of the Portuguese and the Dutch, the tall and dense palmyra groves and the bushy Odai trees, the Teris and the adjacent coral islands, Idayankudi and Manappadu and the adjacent places which became the headquarters of great missionaries like G.U.Pope, Veeramamunivar, Caldwell and others who, besides their missionary work,contributed a lot for the development of Tamil language and literature and above all the enterprising and hard working people who now constitute a major trading community in the State.

 

Thoothukkudi District MapThoothukudi Area:

Area Sq. Km: 4,745

Thoothukudi Population:

Male: 865,021
Female: 885,155
Total: 1,750,176

Literacy Rates

Male: 91.14%
Female: 81.33%
Total: 86.16%