Kadayanallur (State Assembly Constituency)

Kadayanallur is a state assembly constituency in Tamil Nadu. It is part of the Tenkasi Lok Sabha constituency.

Total Voters:

Male 1,31,786
Female: 1,31,337
Transgender 5
Total 2,63,128

AIADMK Candidate for Kadayanallur Assembly Election 2016 – Mr.SekThavithu

AIADMK Candidate for Kadayanallur - Sek thavithu
 

கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

கடையநல்லூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனர்- தலைவருமான எஸ்.சேக்தாவூது, தொகுதி தேர்தல் அலுவலர் உஷாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேக்தாவூது ரூ.1 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரத்து 8 மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள், தங்க நகைகள் மற்றும் ரொக்கம், வங்கி இருப்பு உள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

 

அதிமுக அரசின் சாதனைகள் 234 தொகுதிகளிலும் வெற்றியை தரும்: சேக்தாவூது

ஏப்ரல் 25,2016,

தமிழக அரசின் சாதனைத் திட்டங்கள் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தரும் என்றார் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவரும், கடையநல்லூர் பேரவைத் தொகுதி வேட்பாளருமான சேக்தாவூது.

கடையநல்லூர் பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலர் முத்துக்கருப்பன் எம்.பி. தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வசந்திமுருகேசன் எம்.பி., முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய பிரிவு இணைச் செயலர் ஆனைக்குட்டிப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலர் வி.பி.மூர்த்தி, நகரச் செயலர்கள் கிட்டுராஜா, குட்டியப்பா, சுசீகரன், ஒன்றியச் செயலர்கள் முத்துப்பாண்டி, செல்லப்பன், சங்கரபாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நயினாமுகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் தொகுதிச் செயலர் பொய்கை மாரியப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் முத்துக்கருப்பன் எம்.பி. பேசுகையில், தமிழக முதல்வர் கடையநல்லூர் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளார். அவரை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

வேட்பாளர் சேக்தாவூது பேசியது: தமிழக முதல்வரின் ஒவ்வொரு திட்டமும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. முதல்வரின் சாதனைத் திட்டங்கள் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்றார்.

நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் கமாலுதீன், அயுப், பெருமையா பாண்டியன், பெரியதுரை, அழகர்சாமி, செங்கலமுடையார், வழக்குரைஞர் அதிவீரராமபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர்  தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு :  வேட்பாளர் ஷேக் தாவூத் பிரசாரம் தொடக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

கடையநல்லூர் தொகுதி கூட்டணி கட்சியான தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதியில் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் போட்டியிடுகிறார். கடையநல்லூர் தொகுதி தேர்தல் அலுவலகம் கடையநல்லூர் மெயின் பஜாரில் நேற்று திறக்கப்பட்டது. வேட்பாளர் ஷேக் தாவூத் தேர்தல் அலுவலககத்தை திறந்தார். தொடர்ந்து அவர் பிரசாரத்தை மேற்கொண்டார். முக்கிய வீதிகளில் ஷேக் தாவூத் பிரசாரம் செய்தார். அவர் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான், கடையநல்லூர் தொகுதி அ.தி.மு.க செயலாளர் பொய்கை. மாரியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. நயினா முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்வேன் கடையநல்லூர் தொகுதி வேட்பாளர் எஸ்.ஷேக் தாவூத் பேட்டி

சனி, ஏப்ரல் 09,2016,

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்வேன் என்று கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் எஸ்.ஷேக் தாவூத் கூறினார்.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவரும், கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணிவேட்பாளருமான எஸ்.ஷேக் தாவூத் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

தேர்தல் பிரசாரம்
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சட்டசபை தேர்தலில் 227 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் என்று அறிவித்து உள்ளார். நான் கடையநல்லூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். நாளை (அதாவது இன்று) தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. அரசின் 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்போம். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஜெயலலிதா தீர்வு காண அதிக முயற்சி எடுத்து உள்ளார். சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு பாதுகாப்பாக இருந்து உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தான் முஸ்லிம்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டனர். சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

குறைதீர்க்கும் முகாம்
அ.தி.மு.க. ஆட்சியில் கடையநல்லூர் தொகுதிக்கு தேவையான பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளனர். தாலுகா அலுவலகம், ஐ.டி.ஐ., ஆஸ்பத்திரியில் சித்தமருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம். நான் கடையநல்லூர் தொகுதியிலேயே தங்கி இருந்து மக்களுக்கு சேவை செய்வேன். வாரத்தில் 3 நாட்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தி மனுக்கள் வாங்கப்படும்.

இவ்வாறு ஷேக் தாவூத் கூறினார்.

அப்போது மாநில பொதுச்செயலாளர் ரேஷ்மா தாவூத், பொருளாளர் செய்யது ஜமாலுதீன், நிர்வாகிகள் முஸ்தபா, ஜாகிர்உசேன், முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Chendur Pandian .P AIADMK 80794
Thirteenth 2006-2011 Peter Alphonse.S INC 53700
Twelfth 2001-06 Subbiah Pandian.M. ADMK 48220
Eleventh 1996-01 Naina Mohamed, K. DMK 49641
Tenth 1991-96 S. Nagoormeeran ADK 55681
Ninth 1989-91 Samsudin Alias Kathiravan DMK 37531
Eighth 1984-89 Perumal, T. ADK 49186
Seventh 1980-84 Shahul Hameed A. IND 38225
Sixth 1977-80 M.M.A. Razak ADK 29347
Fifth 1971-77 Subbbiah Mudaliar A. R. DMK 37649
Fourth 1967-71 A.R.S.Mudaliar IND 36349

History of Tirunelveli District

Nellaiappar TempleTirunelveli also known as Nellai and historically (during British rule) as Tinnevelly, is a city in the South Indian state of Tamil Nadu. It is the administrative headquarters of the Tirunelveli District. It is the sixth largest municipal corporation in the state. Tirunelveli is located 700 km (430 mi) southwest of the state capital, Chennai and 58 km (36 mi) away from Thoothukudi.

Tirunelveli an ancient city is about 2000 years old and is a town of hoary tradition. Tamirabarani River flows here gives pride to the city. Tirunelveli is the capital of Tirunelveli District. This district was formed on 1st September 1790. . It is twin city namely Tirunelveli and Palayamkottai.

Industries in Tirunelveli include administrative services, agricultural trading, tourism, banking, agricultural machinery and educational services. The city is an educational hub of southern Tamil Nadu, with institutions such as Tirunelveli Medical College, the Veterinary College and Research Institution, Tirunelveli Law College and the Government College of Engineering. Tirunelveli is administered by a municipal corporation, established in 1994 by the Municipal Corporation Act.

The freedom fighters of 18th to 20th century Veera Pandiaya Kattabomman, Pulithevan Veeran AzhagumuthuKone V.O. Chidambaram Veeran Sundaralingam Subramania Bharathiar and Vanachinathan were born in Tirunelveli District. Hence Tirunelveli District was placed first for freedom struggle to quit the British dynasty. This district is famous for palm sugar candy and palm leaf handicrafts.

 

Tirunelveli District Map

Tirunelveli Area

Area Sq. Km: 6,693

Tirunelveli Population

Male: 1,520,912
Female: 1,556,321
Total: 3,077,233

Literacy Rates

Male: 89.24%
Female: 75.98%
Total: 82.50%