Tirunelveli (State Assembly Constituency)

Tirunelveli is an assembly constituency located in Tirunelveli Lok Sabha Constituency in Tamil Nadu. It is one of the oldest assembly segments in Tamil Nadu since Independence. Tirunelveli will be one of 17 assembly constituencies to have VVPAT facility with EVMs in Tamil Nadu Legislative Assembly election, 2016.

Total Voters

Male 1,02,881
Female: 1,02,111
Transgender 6
Total 2,04,998

AIADMK Candidate for Tirunelveli Assembly Election 2016 – Mr.Nayinar Nagendran

AIADMK Candidate for Tirunelveli - Nayinar Nagendran
 

 

மானூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

மே 11,2016,

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி நகரம் மற்றும் மானூர் ஒன்றியப் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலி நகரில் 40, 41 மற்றும் 42 ஆவது வார்டு பகுதி, தென்பத்து, ராஜவல்லிபுரம், பாலாமடை, குப்பைக்குறிச்சி, மானூர் ஒன்றியம் மகிழ்வண்ணநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில், மானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

25 கிராமங்களில் நயினார்நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

மே 10,2016,

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் திங்கள்கிழமை 25 கிராமங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் சந்திப்பு பாலபாக்கியாநகர், தச்சநல்லூரில் விடுபட்ட பகுதியில் வாக்குசேகரித்தார். மாலையில் மானூர் ஒன்றியப் பகுதியில் அழகியபாண்டியபுரம், சுப்பையாபுரம், செட்டிக்குறிச்சி, வடக்கு செழியநல்லூர், தெற்கு செழியநல்லூர் உள்பட 25 கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தார்.

பிரசாரத்தில், அதிமுக அரசில் நிறைவேற்ற திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மானூர் தெற்கு ஒன்றியச் செயலர் கல்லூர் இ. வேலாயுதம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை அ. செல்லத்துரை, அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க மாநிலப் பொருளாளர் நெல்லை பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

மானூர் பகுதியில் நயினார்நாகேந்திரன் வாக்குசேகரிப்பு

மே 9,2016,

மானூர் ஒன்றியத்துக்குள்பட்ட வேப்பன்குளம், கம்மாளன்குளம், முத்தன்குளம், வெட்டுவான்குளம், சங்குமுத்தம்மாள்புரம், அபிஷேகப்பட்டி, ராமையன்பட்டி, வடுகப்பட்டி, சேதுராயன்புதூர் உள்பட பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக சென்று திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தார்.

அப்போது, அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள 100 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப அட்டைக்கு செல்லிடப்பேசி போன்ற நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன் என்று வேட்பாளர் வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தில் மானூர் தெற்கு ஒன்றியச் செயலர் கல்லூர் இ. வேலாயுதம், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நயினார் நாகேந்திரனை ஆதரித்து கட்சியின் சார்பு அணியினர் மாநகர பகுதியில் வீடு வீடாக வாக்குசேகரித்தனர்.

நயினார் நாகேந்திரனுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு

மே 8,2016,

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாநகர, மாவட்ட தலைமை ரஜினிகாந்த ரசிகர் நற்பணி மன்றத் தலைவராக உள்ளவர் மா. தளபதிமுருகன் (43). சிந்துபூந்துறையைச் சேர்ந்த இவர், அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியது:

பேரவைத் தேர்தலில் ரசிகர்கள் அவரவர் விருப்பப்படி முடிவு செய்து கொள்ளலாம் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துவிட்டார். இதையடுத்து, திருநெல்வேலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தேன். ஆனால், உறுதிமொழி ஆவணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. எனவே, அனைவராலும் எளிதில் அணுகக் கூடிய நபராக உள்ள அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்தினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். திருநெல்வேலி மாநகரத்தில் 50 ஆயிரம் ரஜினி ரசிகர்கள் உள்ளனர். அனைவரும் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம்.

அதிமுக வெற்றி பெற்றால், நடிகர் ரஜினியின் கபாலி திரைப்படத்தின் முதல் காட்சி திருநெல்வேலி திரையரங்கில் ரசிகர்களுக்கு முற்றிலும் இலவசமாக காண்பிக்கப்படும். அடுத்த காட்சி பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதிக்கப்படும் என்றார் அவர்.

நெல்லை அதிமுக வேட்பாளர் தீவிர வாக்குசேகரிப்பு

மே 7,2016,

திருநெல்வேலி, பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன், சுத்தமல்லி, பேட்டை, கருங்காடு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார்.

வேட்பாளருடன் மானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், சுத்தமல்லி ஊராட்சித் தலைவர் பிரம்மநாயகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வேட்பாளர்கள் நயினார்நாகேந்திரன், எஸ்.கே.ஏ. ஹைதர்அலி ஆகியோர் பேராயரை சந்தித்து ஆசிபெற்றனர். அப்போது மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன் எம்.பி., விஜிலாசத்யானந்த் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தாழையூத்து,  மானூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

மே 4,2016,

தாழையூத்து, மானூர் பகுதிகளில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்தனர்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் தாழையூத்து, ராஜவல்லிபுரம், நாரணம்மாள்புரம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்தார்.

அப்போது, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.

மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கல்லூர் இ.வேலாயுதம், பல்லிக்கோட்டை செல்லத்துரை, மீரான் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

உகந்தான்பட்டியில் அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

மே 3,2016,

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் மானூர் தெற்கு ஒன்றியப் பகுதிகளுக்குச் சென்று திங்கள்கிழமை வாக்குசேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்குத்தங்கம் என கடந்த தேர்தலின்போது அளித்த 54 வாக்குறுதிகளை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத பல திட்டங்களையும் அறிவித்ததோடு, அதனையும் சிறப்பாக செய்து முடித்துள்ளார். அதிமுக அரசின் நலத்திட்டங்களைப் பெறாத குடும்பங்களே இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்கியுள்ளார். இந்த நலத்திட்டங்கள் தொடர அதிமுகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.

புதூர், உகந்தான்பட்டி, சீதபற்பநல்லூர் கஸ்பா, சமத்துவபுரம், கிருஷ்ணபேரி, வல்லவன்கோட்டை, துலுக்கர்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கல்லூர் இ.வேலாயுதம், பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன்சென்றனர்.

 

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரசாரம்

மே 2,2016,

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்  நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடிகர் சிங்கமுத்து வாக்குசேகரித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி 4 ஆவது வார்டில் மேகலிங்கபுரம், உடையார்பட்டி, அருகன்குளம், மேலூர், மணிமூர்த்தீஸ்வரம், சிந்துபூந்துறை, தெற்கு மற்றும் வடக்கு பாலபாக்கியாநகர், சுகர்மில் காலனி, இருதயநகர், 2 ஆவது வார்டில் இந்திராநகர், சிதம்பரநகர், பால்கட்டளை, கரையிருப்பு, அழகநேரி, கங்கைகொண்டான், ஆலடிபட்டி, ராஜபதி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்குசேகரித்தார்.

பிரசாரத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும், கல்லூர், சுத்தமல்லி, பேட்டை, திருநெல்வேலி நகரம் ஆகிய பகுதிகளிலும் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சிங்கமுத்து பிரசாரம் மேற்கொண்டார்.

அவருடன் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன் எம்.பி, பகுதிச் செயலர் ந. மோகன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை ந. கணேசராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் சுதா பரமசிவன் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 27,2016,

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார்நாகேந்திரன், திருநெல்வேலி மாநகராட்சியின் 54 ஆவது வார்டுக்குள்பட்ட தொண்டர் சன்னதி, அக்கசாலவிநாயகர் கோயில் தெரு, கருவேலம்குண்டு, காமராஜர் நகர், கண்டியப்பேரி, ராமையன்பட்டி, பாறையடி, சாலியர் தெரு, போலீஸ் காலனி, ரெங்கநாதபுரம், ராஜாஜிபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார். அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தங்களது பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் பெண்கள் முறையிட்டனர்.

 

பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 24,2016,

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பேட்டை பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

பேட்டை, திருப்பணிக்கரிசல்குளம் பகுதியில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

பிரசாரத்தில் மானூர் ஒன்றியக் குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், மாநகராட்சி உறுப்பினர் ஆயிஷா, கூட்டுறவு சங்கத் தலைவர் ராமலிங்கம், வட்டச் செயலர் ராஜ், உடையார், ஜஹான் அமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

திருநெல்வேலி நகரப் பகுதியில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான நயினார் நாகேந்திரன், தினமும் காலை, மாலை நேரங்களில் தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சென்று வாக்குசேகரித்து வருகிறார். திருநெல்வேலி மாநகராட்சியின் 43ஆவது வார்டுக்குள்பட்ட செண்பகவிநாயகர் கோயில் தெரு, கல்லனை சாஸ்தா தெரு, கன்னாயக்குடி தெரு, கரிக்காதோப்பு, பேட்டை, தென்பத்து, மேட்டுத்தெரு, அகிலாண்டபுரம், கம்புகடை தெரு, மகிழ்வண்ணநாதபுரம், செண்பகம்பிள்ளை தெரு, தெற்கு மவுண்ட் சாலை, ஒற்றத்தெரு, ரயில்வே பீடர் சாலை, பாபா தெரு ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இந்த நிகழச்சியில், வேட்பாளருடன் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் சுதா பரமசிவன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர்.

 

நெல்லை தேர்தல் அலுவலகம் திறப்பு: அ.தி.மு.க. வேட்பாளர்  நயினார் நாகேந்திரன் பிரசாரம் தொடங்கினார்

Tirunelveli-district-Digg-The-opening-of-the-offices-of-the_SECVPFஞாயிறு, ஏப்ரல் 10,2016,

நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்கள். அவர்கள் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்கள். பிரசாரத்தையொட்டி தேர்தல் அலுவலகங்களும் திறக்கப்பட்டன.

வேட்பாளர்கள் பிரசாரம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 4-ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்கள். காலை 11 மணி அளவில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டன. தொடர்ந்து வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிடுகிறது. கடையநல்லூர் தொகுதி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் அலுவலகம்

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த தேர்தல் அலுவலகத்தை அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளருமான அ.தமிழ்மகன் உசேன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே நெல்லை சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன் எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நெல்லை டவுன் பகுதியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்தார். அவர் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Nainar Nagenthran AIADMK 86220
Thirteenth 2006-2011 Malai Raja N DMK 65517
Twelfth 2001-06 Nainar Nagendran. ADMK 42765
Eleventh 1996-01 Subramanian, A.L. DMK 59914
Tenth 1991-96 Veliah D. ADK 63138
Ninth 1989-91 Subramanian, A.L. DMK 37991
Eighth 1984-89 Veerappan.R.M ADK 52729
Seventh 1980-84 Narayanan, S. ADK 56409
Sixth 1977-80 Nedunchezhiyan, V. R. ADK 48338
Fifth 1971-77 G.R. Edmund ADK 26419

History of Tirunelveli District

Nellaiappar TempleTirunelveli also known as Nellai and historically (during British rule) as Tinnevelly, is a city in the South Indian state of Tamil Nadu. It is the administrative headquarters of the Tirunelveli District. It is the sixth largest municipal corporation in the state. Tirunelveli is located 700 km (430 mi) southwest of the state capital, Chennai and 58 km (36 mi) away from Thoothukudi.

Tirunelveli an ancient city is about 2000 years old and is a town of hoary tradition. Tamirabarani River flows here gives pride to the city. Tirunelveli is the capital of Tirunelveli District. This district was formed on 1st September 1790. . It is twin city namely Tirunelveli and Palayamkottai.

Industries in Tirunelveli include administrative services, agricultural trading, tourism, banking, agricultural machinery and educational services. The city is an educational hub of southern Tamil Nadu, with institutions such as Tirunelveli Medical College, the Veterinary College and Research Institution, Tirunelveli Law College and the Government College of Engineering. Tirunelveli is administered by a municipal corporation, established in 1994 by the Municipal Corporation Act.

The freedom fighters of 18th to 20th century Veera Pandiaya Kattabomman, Pulithevan Veeran AzhagumuthuKone V.O. Chidambaram Veeran Sundaralingam Subramania Bharathiar and Vanachinathan were born in Tirunelveli District. Hence Tirunelveli District was placed first for freedom struggle to quit the British dynasty. This district is famous for palm sugar candy and palm leaf handicrafts.

 

Tirunelveli District Map

Tirunelveli Area

Area Sq. Km: 6,693

Tirunelveli Population

Male: 1,520,912
Female: 1,556,321
Total: 3,077,233

Literacy Rates

Male: 89.24%
Female: 75.98%
Total: 82.50%