Tiruppur (South)

Tiruppur South is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitations 2008. It is included in the Tiruppur parliamentary constituency.

Total Voters:

Male: 1,26,409
Female: 1,20,105
Transgender: 27
Total: 2,46,541

 

அதிமுக வேட்பாளர் சு.குணசேகரன் வேட்புமனு தாக்கல்

ஏப்ரல் 29, 2016,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் உள்பட 53 பேர் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சு.குணசேகரன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக குமரன் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த அவர், பகல் 12.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் வந்தார். பின்னர் 12.50 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் மா.அசோகனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மாநகராட்சி துணை மேயராக இருந்த இவர் தனது சொத்து மதிப்பு விவரங்களில், தனது பெயரில் ரூ. 75 லட்சத்து 44,702, தனது மனைவி கு.கவிதா பெயரில் ரூ. 35 லட்சத்து 55,142 மதிப்புக்கு அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ. 1 கோடிக்கு அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் அசையா சொத்துகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சு.குணசேகரனை ஆதரித்து அ.தி.மு.க. பேச்சாளரும், நடிகையுமான ஆர்த்தி பிரசாரம்

திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சு.குணசேகரனை ஆதரித்து அ.தி.மு.க. பேச்சாளரும், நடிகையுமான ஆர்த்தி பிரசாரம்ஏப்ரல் 27, 2016,

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று நடிகை ஆர்த்தி கூறினார்.

நடிகை ஆர்த்தி

திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சு.குணசேகரனை ஆதரித்து அ.தி.மு.க. பேச்சாளரும், நடிகையுமான ஆர்த்தி நேற்று இரவு திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–

மழை எப்படி சமமாக பெய்கிறதோ, அதேபோல் தான் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. நம்ம கட்சி, அந்த கட்சி என்று எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் வீட்டில் ஜெயலலிதா கொடுக்கும் 20 கிலோ அரிசிதான் உலையில் கொதிக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர் தான் குடும்ப தலைவி. தனி ஒரு மனிதனின் தலை எழுத்தை நிர்ணயிப்பது பிரம்மா என்றால், அந்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை அலங்கரிப்பவர் நமது முதல்–அமைச்சர் ஜெயலலிதா. கருவறை முதல் கல்லறை செல்லும் வரை எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியவர் ஜெயலலிதா.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தங்க தொட்டிலில் பிறந்து, தங்க தட்டிலும், தங்க கரண்டியில் சாப்பிட்டவர். அவருக்கு ஊழல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா ஊழல் செய்கிறார் என்று கூறும் மற்ற கட்சியினர் தான் ஊழல் செய்து வருகின்றனர்.

234 தொகுதிகளிலும் வெற்றி

2ஜி வழக்கில் ஊழல் செய்தவர்கள். இப்போது 3ஜி, 4ஜி கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள். இது அடுத்த தலைமுறையை கெடுக்க வழிவகுக்கும். அவர்கள் தேர்தல் அறிக்கையில் எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை. அம்மா உணவகம் பெயரை மாற்றி அண்ணா உணவகம் என்று வைத்து விடுவார்களாம். ஏன்? தி.மு.க.வுக்கு முன் அண்ணாவை சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே?

நீங்கள் அனைவரும் இந்த தேர்தலில் விழித்துக்கொள்ள வேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா உங்களுக்காக பாடுபடுகிறார். பொது மக்களான நீங்கள் தான் ஜெயலலிதாவின் குடும்பம். அதனால் தான் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். உங்களுக்காக குரல் கொடுக்க தயாராக இருக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு நடிகை ஆர்த்தி பேசினார்

 

திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சு.குணசேகரன்  ஆதரித்து திருப்பூரில் நடிகர் செந்தில் பிரசாரம்

திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சு.குணசேகரன் ஆதரித்து திருப்பூரில் நடிகர் செந்தில் பிரசாரம் ஏப்ரல் 27, 2016,

திருப்பூர்,

ஜெயலலிதாவுக்கு வாக்களித்தால் நல்ல திட்டங்களை உங்களுக்கு கொடுப்பார் என்று தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் செந்தில் கூறினார்.

நடிகர் செந்தில்

திருப்பூர் வடக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சு.குணசேகரன் ஆகியோரை ஆதரித்து திருப்பூரில் நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

லட்டுதான் கொடுப்பார்கள்

மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன கிழித்தீர்கள் என்று கேட்கிறார். அவர்கள் கிழித்து சென்றவற்றை நாங்கள் தைத்துக்கொண்டு இருக்கிறோம். சொன்னதை செய்வோம் என்று கூறினார்களே செய்தார்களா? 2 ஏக்கர் நிலம் கொடுக்கிறேன் என்று தி.மு.க.வினர் சொன்னார்களே செய்தார்களா? 2 கிலோ திருநெல்வேலி அல்லா தான் கொடுத்தார்கள். இந்த முறை அவர்களுக்கு ஓட்டு போட்டால் திருப்பதி லட்டு கொடுப்பார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளார். இந்த முறை ஓட்டு போட்டால் அவர் உங்களுக்கு 5 மடங்கு அதிகமாக செய்வார்.

அமெரிக்க ஜனாதிபதி

பிரேமலதா பிரதமர். கணவர் முதல்–அமைச்சர். தம்பி நிதிஅமைச்சர் என்று கனவு காண்கிறார்கள். ஏன் நான் கூட அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ஆகலாம் என்று நினைக்கிறேன், நடக்குமா? கருணாநிதியை பற்றி வைகோ பேசியது மிகவும் தவறு. விஜயகாந்துடன் சேர்ந்ததால் அவர் அப்படி பேச தொடங்கி விட்டார்.

வைகோவுக்கு பம்பரம் சின்னத்தையும், ராமதாசுக்கு மாம்பழம் சின்னத்தையும் ஜெயலலிதாதான் பெற்றுக்கொடுத்தார். ஜெயலலிதாவுக்கு வாக்களித்தால் நல்ல திட்டங்களை உங்களுக்கு கொடுப்பார். எனவே நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் தவறாமல் வாக்களியுங்கள்.இவ்வாறு நடிகர் செந்தில் பேசினார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Thangavel.K CPM 75424

History of Tiruppur District

Temples in Tiruppur

TTiruppur or Tirupur is a city in the Kongu Nadu region of the Indian state of Tamil Nadu. Tiruppur is the administrative headquarters of Tiruppur district and the fifth largest urban agglomeration in Tamil Nadu. Located on the banks of Noyyal River, it has been ruled at different times, by the Early Pandyas, Medieval Cholas, Later Cholas, Vijayanagar Empire, Madurai Nayaks, Mysore Kingdom and the British. It is situated at the center of the South Indian Peninsula, about 450 kilometres (280 mi) southwest of the state capital Chennai and about 50 kilometres (31 mi) east of Coimbatore.

Tiruppur is administered by municipal corporation which was established in 2008 and the total area of the corporation is 159.6 km2 divided into 60 wards. The total population of the city as per the 2011 census is 444,352. Tiruppur is a part of the Tiruppur constituency that elects its member of parliament.

Tiruppur is a major textile and knit wear hub contributing to 90% of total cotton knit wear exports from India. The textile industry provides employment to over six lakh people and contributed to exports worth 200 billion (US$2.9 billion) in 2014-15.

 

Tiruppur District MapTiruppur Area:

Area Sq. Km: 5,187

Tiruppur Population:

Male: 1,246,159
Female: 1,232,893
Total: 2,479,052

Literacy Rates

Male: 85.49%
Female: 71.82%
Total: 78.68%