Gummidipoondi (State Assembly Constituency)

Gummidipundi is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male 1,27,756
Female: 1,31,407
Transgender 31
Total 2,59,194

 

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் எல்லாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட பாலவாக்கம்,ஜெ.ஜெ.நகர், லட்சிவாக்கம், கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், கிராமங்கள் அனைத்திலும் குடிநீர் வசதி, தரமான சாலைகளை அமைத்துத் தருவேன் என்று உறுதி அளித்தார்.

இந்த பிரசாரத்தின் போது மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.ரவிச்சந்திரன், எல்லாபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் அம்மினி மகேந்திரன், பாலவாக்கம் ஊராட்சித் தலைவர் தயாகர் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் வாக்கு சேகரிப்பு

மே 02,2016,

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் திங்கள்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
 அவர் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆத்துப்பாக்கம், மங்காவரம், அப்பாவரம், மேலக்கழனி, ஓபசமுத்திரம், சுண்ணாம்புகுளம், மெதிப்பாளையயம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

 அப்போது ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, பொதுக் குழு உறுப்பினர் அபிராமன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் முல்லைவேந்தன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் நாகலட்சுமி ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர், திருக்கண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் அதிமுக மகளிர் அணியினருடன் சென்று வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 இந்த வாக்கு சேகரிப்பில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக மகளிர் அணியினர் வேட்பாளருடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு தலைவர் அம்மினி மகேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் 5 ஆண்டுகால சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்பு

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் 5 ஆண்டுகால சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்புஏப்ரல் 25,2016,

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் கிராமம் கிராமமாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளைக் கூறி பெண்கள், விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். நடிகர் அஜய் ரத்தினம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

வாக்கு சேகரிப்பின் போது, கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால் நாயுடு, பொதுக் குழு உறுப்பினர் அபிராமன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் முல்லைவேந்தன், நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர், பேரூராட்சி உறுப்பினர்கள் மனோகரன், சிராஜுதின், அதிமுக நிர்வாகி எஸ்.டி.டி.ரவி உடனிருந்தனர்.

 

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஏப்ரல் 21, 2016,

கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உள்பட்ட புதுவாயல், பெருவாயல், கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, ஏ.என்.குப்பம், தண்டலச்சேரி, கெட்ணமல்லி, பனபாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின்போது மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பி.ரவிசந்திரன், ஒன்றியச் செயலாளர் கோபால்நாயுடு, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கோவி.நாராயணமூர்த்தி, மாவட்ட அதிமுக மாணவர் அணிச் செயலாளர் முல்லை வேந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

வாக்கு சேகரிப்பின்போது அதிமுக வேட்பாளரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

 

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 19, 2016,

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் ஆரம்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலில் பூஜை செய்து தனது பிரசாரத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார். பிரசாரத்தின் போது மாவட்ட ஊராட்சிக் குழுதலைவர் பி.ரவிச்சந்திரன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

வேட்பாளருடன் திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், பூந்தமல்லி எம்எல்ஏ இரா.மணிமாறன், ஒன்றிய இளைஞர், இளம்பெண் பாசறைச் செயலாளர் டி.சி.மகேந்திரன், ஊராட்சித் தலைவர்கள் நாயுடுகுப்பம் ரகு, கண்ணம்பாக்கம் சதீஷ், பல்லவாடா ரமேஷ்குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் வாக்காளரிடம் வாக்கு சேகரிப்பு: தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில் முதல் வாக்குச் சாவடி எகுமதுரை ஊராட்சியில் அமைந்துள்ளது. இதன்படி தமிழகத்தின் முதல் வாக்காளர் எகுமதுரை ஊராட்சியைச் சேர்ந்த குசேலனின்  மனைவி கே.பிரவீணா. கடந்த 2 தேர்தல்களிலும் இவரே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தமிழகத்தின் முதல் வாக்காளராக கருதப்படுகிறார்.

இந்நிலையில் கே.பிரவீணாவிடம் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் துண்டுப் பிரசுரத்தை அளித்து வாக்கு சேகரித்தார்.

 

எல்லாபுரம் ஒன்றியத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 18, 2016,

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார்  எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், செஞ்சி அகரம், பேராண்டூர், பனப்பாக்கம், லட்சிவாக்கம், எல்லம்பேட்டை, பாலவாக்கம், சிங்கிலிகுப்பம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் திறந்த வேனில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

எல்லாபுரம் ஒன்றியக் குழு தலைவர் அம்மினி மகேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பா.ரவிச்சந்திரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பெரம்பூர் ரஜினி, ரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Sekar C H DMDK 97708
Thirteenth 2006-2011 Vijayakumar.K.S AIADMK 63147
2005 Vijayakumar Ks AIADMK 83717
Twelfth 2001-06 Sudarsanam.K. ADMK 73467
Eleventh 1996-01 Venu, K. DMK 61946
Tenth 1991-96 Sakkubai R. ADK 61063
Ninth 1989-91 Venu, K. DMK 36803
Eighth 1984-89 R. S. Munirathinam ADK 55221
Seventh 1980-84 Munirathinam,R.S ADK 41845
Sixth 1977-80 S. Munirathinam ADK 32309
Fifth 1971-77 K A Vezhavendan DMK 43355

History of Tiruvallur District

Sri Vaidiya Veera Raghavar Temple

Tiruvallur is a temple town and Grade I municipality in Chennai in the Indian state of Tamil Nadu. It is located on the banks of Cooum river about 42 km (26 mi) northwest of Chennai, the capital city of Tamil Nadu and located in Chennai City.It is the administrative headquarters of Tiruvallur district. This town consists of four revenue villages namely Periakuppam, Perumpakkam and Pungathur. The town is divided into 27 wards. It is well known because of the Veera Raghavar temple which is one of the 108 sacred shrines of Vaishnavites. There is a pond nearby this temple, where the tank festival is held. There is a Siva temple near this shrine which is also quite popular among the locals. There is also a 40 feet tall Viswaroopa Panchamukha Hanuman temple, where the murti is made of a single green granite stone. Poondi reservoir from where drinking water is drawn to Chennai city is at about 9 km (5.6 mi) from this town. The neighbourhood is served by Tiruvallur railway station of the Chennai Suburban Railway Network. The railway station falls mid-way between the Chennai-Arakkonam railway line. A small town, and now the district headquarter of the recently made Tiruvallur district is developing very fast. It is one of thirty-two districts in Tamil Nadu. Previously, Tiruvallur was a town in the district named Chengalpattu. Tiruvallur is the name of both the town as well as the district. As of 2011, the town had a population of 56,074.

Tiruvallur was originally known as Tiruvallur which specifies the sleeping position of the holy lord “Balaji”, in the Veeraragava temple of Tiruvallur. Later people began to refer it by names such as Trivellore and Tiruvallur. Today Tiruvallur is well known, one of the reason being the Veeraragava Temple. The new moon day is very auspicious day for the lord and so for the people of the town.

 

Tiruvallur District MapTiruvallur Area:

Area Sq. Km: 175

Tiruvallur Population:

Male: 1,876,062
Female: 1,852,042
Total: 3,728,104

Literacy Rates

Male: 89.69%
Female: 78.32%
Total: 84.03%