Tiruvannamalai

Tiruvannamalai is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male 1,25,018
Female: 1,30,321
Transgender 14
Total 2,55,353

AIADMKCandidate for Thiruvannamalai Assembly Election 2016 – Mr. Perumal K Rajan

AIADMK Candidate for Thiruvannamalai Assembly Election 2016 - Mr. Perumal K Rajan
 

திருவண்ணாமலைஅதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

மே 14, 2016,

திருவண்ணாமலை நகரின் பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அதிமுக வேட்பாளர் பெருமாள் நகர் கே.ராஜன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் வாக்காளர்களிடம், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணையதள இணைப்பும் வழங்கப்படும்.

பம்புசெட்டுகளுக்கு 80 சதவீத மானியம் வழங்கப்படும். மீன்பிடி தடைகால நிவாரண உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுமுறையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்படும். ரூ.5 கோடியில் அம்பேத்கர் அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

நகரச் செயலாளர் ஜெ.செல்வம், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ரேடியோ எஸ்.ஆறுமுகம், நகர எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் இளஞ்செழியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை  தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 13, 2016,

திருவண்ணாமலை நகராட்சிக்குள்பட்ட தாமரை நகர், தேனிமலை, அண்ணா நகர் பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று தொகுதி அதிமுக வேட்பாளர் பெருமாள் நகர் கே.ராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தாமரை நகர், தேனிமலை பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பேன். போதிய சாலை வசதியை அமைத்துத் தருவேன். அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தருவேன். தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகரச் செயலாளர் ஜெ.செல்வம், எம்ஜிஆர் மன்றச் செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை  தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 12, 2016,

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திரண்டிருந்த வாக்காளர்களிடம், அதிமுக ஆட்சிக்கு வந்தால், தற்போதைய கணக்கீட்டு முறைப்படி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இதனால் 100 யூனிட் வரை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தும் 78 லட்சம் தமிழக மின் உபயோகிப்பாளர்கள் பயன்பெறுவர்.

கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்த்தப்படும். விசைத்தறிக்கான மின்சாரம் 750 யூனிட்டுகளாக உயர்த்தப்படும் என்று உறுதி கூறி வாக்கு சேகரித்தார்.

நகரச் செயலர் ஜெ.செல்வம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.பவன்குமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்டச் செயலர் சுனில்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் ரேடியோ எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை  தொகுதி அதிமுக வேட்பாளர்  தீவிர வாக்கு சேகரிப்பு

மே 11, 2016,

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பெருமாள் நகர் கே.ராஜன், திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 34, 35-ஆவது வார்டுகளைச் சேர்ந்த மணியாரித் தெரு, கோபால் தெரு, ஆடுதொட்டத் தெரு, திருக்கோயிலூர் சாலை, முகல்புரா தெருக்களில் அவர் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர், கவுன்சிலர்கள் பற்குணகுமார், தயாளன், நகரச் செயலர் ஜெ.செல்வம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.பவன்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்டச் செயலர் சுனில்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் ரேடியோ எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட உடனிருந்தனர்.

திருவண்ணாமலை  தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 09, 2016,

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியின் பல்வேறு பகுதிகள், திருவண்ணாமலை ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பெருமாள் நகர் கே.ராஜன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

 அப்போது, திரண்டிருந்த வாக்காளர்களிடையே தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன், நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.  வேலை இல்லாத இளைஞர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும் என்று கூறி வாக்குச் சேகரித்தார்.

 வாக்குச் சேகரிப்பின்போது, நகரச் செயலாளர் ஜெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் ஏ.கே.குமாரசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Velu E.V DMK 84802
Thirteenth 2006-2011 Pitchandi K DMK 74773
Twelfth 2001-06 Pitchandi.K. DMK 64115
Eleventh 1996-01 Pitchandi, K. DMK 83731
Tenth 1991-96 Kannan V. INC 67034
Ninth 1989-91 Pitchandi, K. DMK 57556
Eighth 1984-89 A. S. Ravindran INC 49782
Seventh 1980-84 Narayanasamy, K INC(I) 54437
Sixth 1977-80 P.U. Shanmugam DMK 27148
Fifth 1971-77 P. U. Shanmugam DMK 46633

History of Tiruvannamalai District

Tiruvannamalai Temple

Tiruvannamalai is a town in the Indian state of Tamil Nadu. The town is administered by a special grade municipality that covers an area of 16.33 km2 (6.31 sq mi) and had a population of 144,278 in 2011. It is the administrative headquarters of Tiruvannamalai District.

Tiruvannamalai is one of the most venerated places in Tamil Nadu. In ancient times, the term “Annamalai” meant an inaccessible mountain. The word “Thiru” was prefixed to signify its greatness, and coupled with the two terms, it is called Tiruvannamalai.

The temple town of Tiruvannamalai is one of the most ancient heritage sites of India and is a centre of the Saiva religion. The Arunachala hill and its environs have been held in great regard by the Tamils for centuries. The temple is grand in conception and architecture and is rich in tradition, history and festivals. The main Deepam festival attracts devotees from far and wide throughout South India. It has historic places besides Tiruvannamalai, Arni, Vandavasi, Devigapuram connected to East India and French companies. In the late Chola period this district was ruled by the Cholan of Sambuvarayar having Padavedu near Arni as HQ. We can now find the fort and note along with a Shiva temple namely Kailasanathar in Arni town.

After independence Tiruvannamalai was under North Arcot District. The civil district of North Arcot was divided into Vellore district and Tiruvannamalai district in October 1989. Thiru. P.Kolappan IAS was the first Collector of Tiruvannamalai District. On the whole Tiruvannamalai is traditionally rich in Historic and spiritual values but lacks in industrial growth.

 

Tiruvannamalai District Map

Tiruvannamalai Area:

Area Sq. Km: 6,188

Tiruvannamalai Population:

Male: 1,235,889
Female: 1,228,986
Total: 2,464,875

Literacy Rates

Male: 83.11%
Female: 65.32%
Total: 74.21%