Sattur

MLA Mr. R.B. Udhaya Kumar with CM

 
MLA Mr. R.B. Udhaya Kumar

 

 

MLA Mr. R.B. Udhaya Kumar

 

 

Father Name Bose.R
Party AIADMK
Date of Birth 10th April 1973
Political Career Minister for Information Technology from 16th May 2011 to 3rd November 2011, Hon. Minister for Sports and Youth Welfare till 19.5.2014
Occupation Advocate
Place of Birth Madurai
Marital Status Married; Two Children
Address Chennai: C 3 E, MLAs’ Quarters Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No. 55C, New H.I.G. Colony, Shenbaga Garden, Anna Nagar, Madurai-625 020.
Telephone Mobile: +91 9943911167; 9843011167
E-mail mlasattur@tn.gov.in
Facebook https://www.facebook.com/Mr-RB-Udayakumar-AIADMK-191243414261696

Sattur Constituency (State Assembly Constituency)

Sattur is an assembly constituency located in Sivakasi Lok Sabha Constituency in Tamil Nadu.

Total Voters:

Male: 1,09,369
Female: 1,12,889
Transgender : 13
Total: 2,22,271

 

சாத்தூர் தொகுதியில் அமைச்சர் பிரசாரம்

மே 13,2016

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, புதன்கிழமை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.

  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்  எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியனை ஆதரித்து, அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது பிரசாரத்தை, கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கினார்.   பின்னர், முக்குராந்தல், பேருந்து நிலையம், மதுரை பேருந்து நிறுத்தம், படந்தால் சந்திப்பு வரை வாக்கு சேகரித்து பேசினார்.   மாலையில், சாத்தூர் தொகுதிக்குள்பட்ட ஒன்றியப் பகுதிகளில் உள்ள தாயில்பட்டி, மடத்துபட்டி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மற்றும் முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார்.   வாக்கு சேகரிப்பின்போது, அதிமுக நகர, ஒன்றிய நிர்வாகிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 12,2016,

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் செவ்வாய்கிழமை பிரசாரம் செய்தார்.

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஜி.சுப்பிரமணியன், நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை வாக்கு சேகரித்தார். அண்ணாநகர், காமராஜபுரம், கூர்லிங்காபுரம், வெம்பக்கோட்டை ரோடு, ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியப் பகுதிகள், கீழராஜகுலராமன், அனுப்பன்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

நகரில் உள்ள வார்டு பகுதிகளில் வார்டு உறுப்பினர்களும், ஒன்றியப் பகுதியில் ஒன்றியச் செயலர் சண்முகக்கனி ஆகியோரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 11,2016,

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அதிமுக வேட்பாளர் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், தொகுதிகுள்பட்ட ராஜபாளையம் கிழக்கு ஒன்றியப் பகுதியில் திங்கள்கிழமை காலை முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து மாலையில் திருவேங்கடபுரம், அழகாபுரி, ஆப்பனூர், திருக்கோதையாபுரம், அய்யனார்புரம், சங்கரபாண்டியாபுரம், மீனாட்சிபுரம், வாகைக்குளம்பட்டி,கணபதியாபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தூர் ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான சாலைவசதிகள், கிராமங்களில் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளதை விளக்கி வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜபாளைய ஒன்றிய அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கிராமங்களில் சாத்தூர் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 08,2016,

சாத்தூர் தொகுதிகுள்பட்ட ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வெள்ளிகிழமை பிரச்சாரம் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டபேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், சாத்தூர் தொகுதிகுள்பட்ட ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து கோபாலபுரம், தேவராயன்பட்டி, வரகுணராமபுரம், மீனாட்சிபுரம், கிருஷ்ணாபுரம், நத்தம்பட்டி, அம்மன்கோவில்பட்டி, கம்மாபட்டி, வடகரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் திறந்தநிலை வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது கடந்த அதிமுக ஆட்சியில் ராஜபாளைய ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான தரமான சாலைவசதிகள், கிராமம் வாரியாக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்யபட்டுள்ளன என்றும், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும் வாக்கு சேகரித்தார். இந்த வாக்குசேகரிப்பின் போது ராஜபாளையம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு எஸ்.ஜி.சுப்பிரமணியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 07,2016,

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டபேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், சாத்தூர் தொகுதிகுள்பட்ட சாத்தூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

 காலையில் சாத்தூர் நகர் பகுதியில் உள்ள அண்ணாநகர், கூருலிங்காபுரம், மேலகாந்திநகர், நடராஜா திரையரங்கம் சாலை, வெள்ளக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், மாலையில் வெங்கடாசலபுரம், சிந்தபள்ளி, கீழஒட்டம்பட்டி, முத்தால்நாயக்கன்பட்டி, மேட்டமலை, வீரபாண்டியாபுரம், உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளிலும் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார்.

 பிரசாரத்தின் போது அவர் கூறியது: கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் அரசு கலை கல்லூரி, புதிய அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்றார்.

 மேலும் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியும் வாக்கு சேகரித்தார். இந்த வாக்குசேகரிப்பின் போது சாத்தூர் நகர்மன்ற தலைவர் டெய்சிராணி, ஒன்றியச்செயலாளர் சண்முக்கனி, ஊராட்சி ஒன்றிய தலைவர் வேலாயுதம், நகரச் செயலாளர் வாசன், தொகுதி இணைச் செயலாளர் முனீஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு எஸ்.ஜி.சுப்பிரமணியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

விஜயகரிசல்குளத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 06,2016,

சாத்தூர் தொகுதி விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

சாத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஜி. சுப்பிரமணியன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மாலையில் விஜயகரிசல்குளம், கோமாளிபட்டி, கங்கர்செவல், கே.லட்சுமியாபுரம், வெம்பக்கோட்டை, கண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, அலமேலுமங்கைபுரம், விளாமரத்துபட்டி, குகன்பாறை, சிப்பிப்பாறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். அதிமுக ஆட்சியில் வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களையும், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். வெம்பக்கோட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

 

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 05,2016,

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், சாத்தூர் தொகுதிகுள்பட்ட வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இதையடுத்து மாதாங்கோவில்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, கரிசல்குளம், சீவலப்பேரி, கண்மாய்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட 25 கிராமங்களில் அவர் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது அதிமுக ஆட்சியில் வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி அவர் வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது வெம்பக்கோட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு எஸ்.ஜி.சுப்பிரமணியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 04,2016,

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், சாத்தூர் தொகுதிகுள்பட்ட ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

  இதையடுத்து, ஆசிலாபுரம், குன்னக்குடி, மவுண்ட்சீயோன், சோலாபுரம், தேசிகாபுரம், கோதைநாச்சியார்புரம், நல்லமநாய்க்கன்பட்டி, கிழவிகுளம் உள்ளிட்ட 19 கிராம பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் செய்தார்.

  பிரசாரத்தின் போது கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான தரமான சாலைவசதிகள், கிராம் வாரியாக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்யபட்டுள்ளது என்றும், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும் வாக்கு சேகரித்தார்.

 அப்போது, ராஜபாளையம் ஒன்றிய அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

வெம்பக்கோட்டை பகுதியில் சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வெம்பக்கோட்டை பகுதியில் சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்புஏப்ரல் 21, 2016,

சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் நிறுத்தப்பட்டுள்ளார்.இவர் சாத்தூர் தொகுதி முழுவதிலும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் வீடு,வீடாக கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது, எதிர்கோட்டை சுப்பிரமணியன் பேசும்போது, அரசின் சாதனை திட்டங்கள் தொடரவும், ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்கவும் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். சாத்தூரில் கோட்டாட்சியர் அலுவலகம், அரசு கல்லூரி, புதிய அரசு மருத்துவமனை, வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், வைப்பாற்றில் புதிய பாலம் உள்பட கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை வழங்கிய அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். பிரசாரத்தின் போது, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், குகன்பாறை ஊராட்சிமன்ற தலைவர் கே.வி.கே.ராஜ், தாயில்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் கணேசன், எதிர்கோட்டை கூட்டுறவு சங்க தலைவர் முனியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- R.B.Uthayakumar AIADMK 88918
Thirteenth 2006-2011 Ramachandran.K.K.S.S.R. DMK 73918
Twelfth 2001-06 Ramachandran K.K.S.S.R DMK 57953
Eleventh 1996-01 Vijayakumar, K.M. DMK 58972
Tenth 1991-96 Ramachandaran K.K.S.S.R. TMK 59942
Ninth 1989-91 S.S. Karuppasamy DMK 52608
Eighth 1984-89 K.K.S.S.R. Ramachandran ADK 58745
Seventh 1980-84 Ramachandran, K. K. Ss. R. ADK 54720
Sixth 1977-80 K.K.S.S.R. Ramachandran ADK 38772
Fifth 1971-77 Alagu Thevar S. FBL 32610
Fourth 1967-71 S.R.Naidu SWA 45223

History of Virudhunagar District

Pilavakkal Dam

Virudhunagar, formerly known as Virudhupatti, is a town and the administrative headquarters of the Virudhunagar district in the South Indian state of Tamil Nadu. It is located 506 km (314 mi) southwest of the state capital Chennai and 53 km (33 mi) south of Madurai. Virudhunagar emerged as an important trade centre during the British rule. The town is the birthplace of freedom fighter K. Kamaraj, former chief minister of Tamil Nadu, and Bharat Ratna recipient. Located to the east of Kowsika River, Virudhunagar has an average elevation of 102 m (335 ft) above sea level and is largely flat with no major geological formations. The town has a humid climate and receives 780 mm (31 in) rainfall annually. Virudhunagar was a part of Madurai and has been ruled at various times by Later Pandyas, Vijayanagar Empire, Madurai Nayaks, Chanda Sahib, Carnatic kingdom and the British.

Virudhunagar is administered by a municipality covering an area of 6.39 km2 (2.47 sq mi). In 2011, the town had a population of 72,296. As the administrative headquarters of the district, the town’s economy is based on the service sector, which employs 93 per cent of the total workforce. The remaining 7 per cent is employed in agriculture, mining, quarrying, raising livestock, manufacturing, construction, trade and commerce. Roadways are the main means of transportation, while the town also has rail connectivity. The nearest airport is Madurai Airport, located 45 km (28 mi) north-east of the town. There are 14 secondary schools, two colleges of arts and sciences (one for men and one for women), one polytechnic college and three university study centres.

 

Virudhunagar District Map

Virudhunagar Area:

Area Sq. Km: 4,241

Virudhunagar Population:

Male: 967,709
Female: 974,579
Total: 1,942,288

Literacy Rates

Male: 87.71%
Female: 72.69%
Total: 80.15%