Sivakasi

MLA Mr. K.T. Rajenthra Bhalaji with CM

 
MLA Mr. K.T. Rajenthra Bhalaji

 

 

MLA Mr. K.T. Rajenthra Bhalaji

 

Father Name Thavasilingam
Party AIADMK
Date of Birth 28th July1964
Political Career Member and Vice-President, Thiruthangal Town Panchayat, 1996-2001 and 2001-2003; Member and Vice-Chairman, Thiruthangal Municipality, 2003-2006 and 2006-2011; Secretary, AIADMK J wing, Thiruthangal, 1988; Secretary, Thiruthangal Town 1991-2003; Secretary, MGR Yough Wing from 2000.
Place of Birth Gurundhamadam
Marital Status Unmarried
Address Chennai: D9A, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No.59, Balaji Nagar, Sukkiravarpatti Road, Thiruthangal, Sivakasi Taluk-626 130.
Telephone Chennai–Residence: 044-25385189
Mofussil–Residence: 04562-232799
Mobile: +91 9443343799
E-mail mlasivakasi@tn.gov.in

Sivakasi (State Assembly Constituency)

Sivakasi is an assembly constituency located in Sivakasi Lok Sabha Constituency in Tamil Nadu. The constituency is in existence since 1957 election.

Total Voters:

Male: 1,15,320
Female: 1,19,093
Transgender: 19
Total: 2,34,432

 

கிராமங்களில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

மே 13,2016,

சிவகாசி ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமங்களில் வியாழக்கிழமை அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

  சிவகாசி ஒன்றியம், சின்னப்பொட்டல்பட்டி, பெரியபொட்டல்பட்டி, ஏ.துலுக்கபட்டி, லட்சுமியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்துப் பிரசாரம் செய்தார். அவருடன் சென்ற தொண்டர்கள், அதிமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் மற்றும் தற்போதைய தேர்தல் அறிக்கை குறித்த துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடையே விநியோகித்தனர்.   சில கிராமங்களில் அமைச்சருக்கு ஆதரவாக பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.  வேட்பாளருடன், ஒன்றியக் குழுத் தலைவர் சி. சுப்பிரமணியம், ஒன்றியச் செயலர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

 

சிவகாசி தொகுதி மேலும் வளர்ச்சிபெற பாடுபடுவேன்: அமைச்சர்

மே 10,2016,

சிவகாசி தொகுதி மேலும் வளர்ச்சி பெற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி ஒன்றியத்தில் உள்ள வேண்டுராயபுரம், சாமிநத்தம், கிருஷ்ணபேரி, நிறைமதி, வடபட்டி உள்ளிட்ட 23 கிராமங்களில் அவர் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: சிவகாசி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல வளர்ச்சிப்பணிகளை செய்துள்ளேன். மேலும் வளர்ச்சி பெற பாடுபடுவேன். இந்த தொகுதியின் தேவையை முதல்வரிடன் கூறி நிறைவேற்றி வைப்பேன்.

கிராமத்து பெண்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் பாடுபட்டு வருகிறார். அவரது கரத்தை பலப்படுத்த அதிமுகவை ஆதரியுங்கள் என்றார்.

வேட்பாளருடன் விருதுநகர் எம்.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

ராமராஜன் பிரசாரம்: திருத்தங்கல் கடை வீதி, சிவகாசி பேருந்து நிலையம் ஆகியபகுதிகளில் ஞாயிற்றுகிழமை அவர் சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்தார். அவர் பேசும்போது, 100 முதல்வர் வேட்பாளர்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க இயலாது.முதல்வர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். இந்த தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜியை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

திருத்தங்கல் நகர அதிமுக செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து நடிகர் குண்டு கல்யாணம் பிரசாரம்

மே 08,2016,

அதிமுக அரசின் சிறப்பான திட்டங்களால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து உள்ளது என நடிகர் குண்டு கல்யாணம் பேசினார்.

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து, வெள்ளிக்கிழமை மாலை திருத்தங்கல் மற்றும் சிவகாசியில் திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம் மற்றும் இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்தனர்.

திருத்தங்கல் நான்கு ரதவீதி மற்றும் அண்ணாசிலை முன்பும், சிவகாசி பேருந்து நிலையம் முன்பும் வேனில் இருந்தவாறு குண்டுகல்யாணம் பேசியதாவது:

தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்களால் ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். விலையில்லா ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பலவற்றை வழங்கி மக்களின் வாழ்கைத் தரத்தை அவர் உயர்த்தியுள்ளார். எனவே வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார்: இந்த தொகுதியில் போட்டியிடும் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர். திரைத்துறை பிரச்னைகளை இவரிடம் பல முறை பேசியுள்ளோம். அவற்றை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு செய்து வைத்துள்ளார். மீண்டும் அவர் வெற்றி பெற அதிமுகவை ஆதரியுங்கள் என்றார்.

இவர்களுடன் திருத்தங்கல் அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட வழக்குரைஞர்பிரிவுஇணை செயலாளர் கணேசன், சிவகாசி நகர செயலாளர் அசன்பத்ரூதின், நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் ஆகியோர் சென்றிருந்தனர்.

திருத்தங்கலில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

திருத்தங்கல்லில் அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை மாலை வாக்கு சேகரித்தார்.

   சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திங்கள்கிழமை மாலை திருத்தங்கலில் வாக்கு சேகரித்தார்.

  திருத்தங்கல் அண்ணாகாலனி, முத்துமாரிகாலனி, கண்ணகிகாலனி, கக்கன்காலனி, முருகன்காலனி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்து பேசியது: கடந்த 5ஆண்டுகளில் திருத்தங்கல் நகருக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

குடிநீர் பிரச்னை கிடையாது. ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் பயன்பெறும் விதமாக அம்மா உணவகம், அம்மா மருந்தகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் பல வார்டுகளில் பேவர் கல் பதிக்கப்பட்டுள்ளது. கடந்த எம்.பி.தேர்தலின் போது அதிமுகவை ஆதரித்தீர்கள். அதுபோல இந்த தேர்தலிலும் என்னை ஆதரிக்க வேண்டுகிறேன் என்றார்.

  வேட்பாளருடன் விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், திருத்தங்கல் நகர அதிமுக செயலாளர் பொன்சக்திவேல், நகர்மன்றத்தலைவி லட்சுமி கணேசன், அம்மாபேரவை செயலாளர் ரமணபிரியன், மாவட்ட வழக்குறைஞர் பிரிவு இணை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் சென்றனர்.

சிவகாசி தொகுதியில் அதிமுகவுக்கு தேவர் கூட்டமைப்பு ஆதரவு

மே 03,2016,

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு தேவர் கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கான கூட்டம் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தேவர் பேரவைத் தலைவர் வெள்ளைதுரைப்பாண்டியன், முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

இதையடுத்து வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் பேசியதாவது:

பசும் பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தங்கக்கவசம் செய்து, தேவரை அழகு பார்த்தவர் முதல்வர் ஜெயலலிதா. நீங்கள் அனைவரும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார். 

 இக்கூட்டத்தில் விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சிவகாசி ஒன்றியக்குழுத் தலைவர் சி.சுப்பிரமணியம், நகர அதிமுக செயலாளர் அசன் பத்ருதின், நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகாசியில் அமைச்சருக்கு ஆதரவாக நகர் மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் வாக்கு சேகரித்தார். கடைவீதி மற்றும் பேருந்துநிலையப்பகுதியில் அவர் வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார்.

அதிமுக வேட்பாளருக்கு கம்மவார் சங்கம் ஆதரவு

மே 02,2016,

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இங்குள்ள பல்வேறு கம்மவார் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதற்கான கூட்டம் சிவகாசியில் உள்ள கம்மவார் திருமணமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொழிலதிபர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தென் மாவட்ட கம்மவார் சங்க துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, சிவகாசி நகரத் தலைவர் திருப்பதி ஆகியோர் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதையடுத்து வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: தமிழக முதல்வர் அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர். திருமலை மன்னர் பிறந்தநாளை அரசு விழாவாக அறித்தார். கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. எனக்கு ஆதரவளிப்பதாக கூறிய உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து சிங்கமுத்து பிரசாரம்

மே 02,2016,

கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து சனிக்கிழமை இரவு சிவகாசி பேருந்து நிலையம் முன்பு வேனில் நடிகர் சிங்கமுத்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது. கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர்  செயல்படுத்திய திட்டங்கள் ஏராளமானவை. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு கிடையாது. தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த தொகுதியில் முதல்வரின் நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார். கடந்த 5ஆண்டுகளில் இந்த தொகுதியில் பல வளர்ச்சிப்பணிகளை செய்துள்ளார். அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களுக்கு இதமான காற்றைத் தரும். வெயில் மக்களை வாட்டி வதைப்பதைப் போல திமுகவின் உதயசூரியனும் மக்களை வாட்டிவதைக்கும் என்றார்.

வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சுஏப்ரல் 23, 2016

அ.தி.மு.க. ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமை தாங்கினார். சிவகாசி யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் டாக்டர் கதிரவன் வரவேற்று பேசினார். இதில் கலந்து கொண்ட மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சிவகாசி தொகுதி வேட்பாளருமான அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு சிறப்பு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அதை செயல்படுத்தினார். இதனால் பல லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளனர். குறிப்பாக பெண் பிள்ளைகளின் திருமணத்தின்போது தாலிக்கு தங்கம் வழங்கியது, பெண்ணின் பிரசவத்துக்கு உதவித்தொகை வழங்கிய, பிரசவத்தின்போது அம்மா பெட்டகம் வழங்கியது என பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஜெயலலிதா வாரி வழங்கினார்.

பிரசாரம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்போதும் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன. இதை, மகளிர் அணியினர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அந்த வீட்டில் உள்ள பெண்களிடம் சொல்லி அவர்களின் வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு சாதகமாக மாற்ற வேண்டும். மகளிருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து செயல்படுத்தினார். பல லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர். இதை நீங்கள் வீடு தோறும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கிய விலையில்லாத ஆடு, மாடுகள் மூலம் பல லட்சம் கிராம மக்கள் பயன்பெற்றுள்ளனர். இதுபோன்ற நலத்திட்டங்கள் இனியும் தொடர வேண்டும் என்றால் மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்க வேண்டும். அதற்கு இந்த மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு மகளிர் அணியினர் தீவிரமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மகளிர் அணி மாநில இணை செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி., மகளிர் அணி மாநில நிர்வாகி சக்திகோதண்டம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவுரி, ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, நகர செயலாளர்கள் அசன்பதுருதீன், பொன்சக்திவேல், வக்கீல் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

7 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

7 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சுஏப்ரல் 23, 2016

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது என அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சாதனைகள்

விருதுநகர் தங்கச்சியம்மன் திருமண மண்டபத்தில் நேற்று அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் நகரசபை தலைவர் சாந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 5 ஆண்டு காலத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா செய்த சாதனைகளை மக்களிடையே எடுத்துக்கூறினாலே அ.தி.மு.க. வேட்பாளர் கலாநிதியின் வெற்றி உறுதி ஆகிவிடும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா கட்சிக்காக உழைத்த கலாநிதியை இங்கு வேட்பாளராக நிறுத்தி உள்ளார். அவர் விருதுநகர் ஒன்றிய செயலாளராகவும், யூனியன் தலைவராகவும், தொகுதி செயலாளராகவும் கட்சி பணியாற்றி உள்ளதுடன் கிராமப்புற மக்களுக்கு அவர்களின் தேவை அறிந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

இங்கு தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் யூனியன் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். ஆனால் அவர் தனது பதவி காலத்தில் இத்தொகுதிக்காக எதையும் செய்யவில்லை.

அழிக்க நினைக்கிறார்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா அருப்புக்கோட்டையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கருணாநிதி பிரசாரத்துக்கு வந்தால் 50 பேர் கூட வர மாட்டார்கள். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கருணாநிதி அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்து விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க.வே இல்லை என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசுகிறார். அவரது கட்சி பிளவுபட்டு இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை தோற்கடித்து தே.மு.தி.க.வை இம்மாவட்டத்தில் இருந்தே விரட்டுவோம். அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் கருணாநிதியின் கட்சிதான், தேர்தலுக்கு பின்னர் அழிந்து போகும்.

உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. விருதுநகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கலாநிதி போட்டியிடுகிறார். 32 ஆண்டுகளுக்கு பின்னர் இத்தொகுதி மக்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கலாநிதிக்கு வாக்களித்தால் அவர் வெற்றி பெற்று விருதுநகர் ரெயில்வே மேம்பால திட்டப்பணியை நிறைவேற்றுவார். மேலும் இத்தொகுதி மக்களின் தேவை அறிந்து பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றுவார். எனவே இத்தொகுதி மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், விருதுநகர் ஒன்றிய செயலாளர் மூக்கையா, நகர செயலாளர் முகமதுநெய்னார், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் மருது உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Rajenthra Bhalaji.K.T AIADMK 87333
Thirteenth 2006-2011 Gnanadoss.R MDMK 79992
Twelfth 2001-06 Rajagopal A TMC(M) 65954
Eleventh 1996-01 Chokkar, R. TMC(M) 61322
Tenth 1991-96 Balagangadharan J. ADK 84785
Ninth 1989-91 Seenivsan, P. DMK 41027
Eighth 1984-89 Balakrishnan, V. ADK 41731
Seventh 1980-84 Balakrishnan, V. ADK 53081
Sixth 1977-80 K. Ramasamy JNP 24518
Fifth 1971-77 Kalimuthu K DMK 39854
Fourth 1967-71 S.A.Thevar SWA 38416

History of Virudhunagar District

Pilavakkal Dam

Virudhunagar, formerly known as Virudhupatti, is a town and the administrative headquarters of the Virudhunagar district in the South Indian state of Tamil Nadu. It is located 506 km (314 mi) southwest of the state capital Chennai and 53 km (33 mi) south of Madurai. Virudhunagar emerged as an important trade centre during the British rule. The town is the birthplace of freedom fighter K. Kamaraj, former chief minister of Tamil Nadu, and Bharat Ratna recipient. Located to the east of Kowsika River, Virudhunagar has an average elevation of 102 m (335 ft) above sea level and is largely flat with no major geological formations. The town has a humid climate and receives 780 mm (31 in) rainfall annually. Virudhunagar was a part of Madurai and has been ruled at various times by Later Pandyas, Vijayanagar Empire, Madurai Nayaks, Chanda Sahib, Carnatic kingdom and the British.

Virudhunagar is administered by a municipality covering an area of 6.39 km2 (2.47 sq mi). In 2011, the town had a population of 72,296. As the administrative headquarters of the district, the town’s economy is based on the service sector, which employs 93 per cent of the total workforce. The remaining 7 per cent is employed in agriculture, mining, quarrying, raising livestock, manufacturing, construction, trade and commerce. Roadways are the main means of transportation, while the town also has rail connectivity. The nearest airport is Madurai Airport, located 45 km (28 mi) north-east of the town. There are 14 secondary schools, two colleges of arts and sciences (one for men and one for women), one polytechnic college and three university study centres.

 

Virudhunagar District Map

Virudhunagar Area:

Area Sq. Km: 4,241

Virudhunagar Population:

Male: 967,709
Female: 974,579
Total: 1,942,288

Literacy Rates

Male: 87.71%
Female: 72.69%
Total: 80.15%