Virudhunagar

Virudhunagar is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu. Elections were not held in year 1957 and 1962. Former chief minister of Tamil Nadu K. Kamaraj lost to P. Seenivasan in 1967 from Virudhunagar.

Total Voters:

Male: 1,02,060
Female: 1,03,792
Transgender: 35
Total: 2,05,887

 

விருதுநகரில் 2 பேருந்து நிலையங்களும் செயல்பட நடவடிக்கை: அதிமுக வேட்பாளர் உறுதி

மே 13,2016,

விருதுநகரில் உள்ள 2 பேருந்து நிலையங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிமுக வேட்பாளர் கி. கலாநிதி உறுதியளித்துள்ளார்.

  சிவகாசி ஒன்றிய பகுதிகளான கவுண்டன்பட்டி, ஏ.குமாரபுரம், அம்மன்கோவில்பட்டி, வெள்ளூர், சிதம்பரம், முத்துக்குமாரபுரம், சேர்வைகாரன்பட்டி, உப்போடை, பவழக்குறிச்சி, ஆனைக்குட்டம் மற்றும் விருதுநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் கி. கலாநிதி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  அப்போது அவர் கூறியது: விருதுநகரில் மேம்பாலப் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். அதேபோல், விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

  விருதுநகர் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் வல்லநாடு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், விருதுநகரில் 2 பேருந்து நிலையங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். கண்மாய், குளங்கள் தூர்வாரப்படும் என்றார்.

  வேட்பாளருடன், அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலர் சங்கரலிங்கம், நகர்மன்ற துணைத் தலைவர் மாரியப்பன், சிவகாசி ஒன்றியச் செயலர் கருப்பசாமி, விருதுநகர் நகர் செயலர் முகம்மது நெய்னார் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் பலர் சென்றிருந்தனர்.

தாமிரவருணி குடிநீர்: அதிமுக வேட்பாளர் உறுதி

மே 12,2016,

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கி.கலாநிதி புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிவகாசி ஒன்றிய பகுதிகளான சாணார்பட்டி, எம்.சொக்கலிங்கபுரம்,எம்.புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, தாளைப்பட்டி, மத்தியசேனை, கக்கன்காலனி, பிச்சுபட்டி, மத்திய சேனை ஆகிய இடங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் இப்பகுதிகளில் தாமிரவருணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் குடி தண்ணீர் வழங்கப்படும். சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என உறுதியளித்தார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் சங்கரலிங்கம், சிவகாசி ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, ஊராட்சிமன்றத் தலைவர்கள் தர்மராஜ், சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

எரிச்சநத்தம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 11,2016,

விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் கி. கலாநிதி, சிவகாசி ஒன்றிய பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  விருதுநகர் அதிமுக வேட்பாளர் கி. கலாநிதி செவ்வாய்க்கிழமை சிவகாசி ஒன்றிய பகுதிகளான எரிச்சநத்தம், நடையனேரி, தாளிக்குளத்துபட்டி, இ. புதுப்பட்டி, அம்பேத்கார் காலனி, குமிழங்குளம், கொத்தனேரி, செவலூர், புதுக்கோட்டை, சித்தமநாய்க்கன் பட்டி, கம்மாபட்டி, ரெங்கபாளையம், மங்கலம், ராமச்சந்திராபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட அவை தலைவர் விஜயகுமார், விருதுநகர் நகராட்சி துணை தலைவர் மாரியப்பன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக கி. கலாநிதிக்கு ஆதரவு கேட்டு நடிகை விந்தியா திங்கள்கிழமை இரவு அல்லம் பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேம்பால பணி விரைவுபடுத்தப்படும்: அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி

மே 10,2016,

விருதுநகர் ராமமூர்த்தி சாலை மேம்பாலப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என அ.தி.மு.க., வேட்பாளர் கி. கலாநிதி உறுதியளித்தார்.

விருதுநகர் அய்யனார் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அ.தி.மு.க. வேட்பாளர் கி. கலாநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலப் பணி தொடர்ந்து நடைபெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். கல்லூரிச் சாலையில் உள்ள வி.என்.பி.ஆர். பூங்கா சீரமைக்கப்படும். பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் முடித்து அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

   அண்ணா தொழிற் சங்க பேரவை இணை செயலாளர் சங்கரலிங்கம், நகர செயலாளர் முகம்மது நய்னார், நகராட்சி தலைவர் சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விருதுநகர் அதிமுக வேட்பாளர் கி. கலாநிதியை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம்

மே 09,2016,

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தார்.

 விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் மேலும் பேசியது:  விருதுநகர் அ.தி.மு.க. வேட்பாளர் கி. கலாநிதி தொகுதிக்காக பாடுபட கூடியவர். மாற்றுக் கட்சிக்கு போடுகிற ஓட்டு கடலில் விழுந்த மழைக்கு சமம் என்றார் அவர். நகராட்சித் தலைவர் சாந்தி, அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சங்கரலிங்கம், ஒன்றியச் செயலர் மூக்கையா, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மச்சராஜா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

விருதுநகரில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 08,2016,

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கி. கலாநிதி சனிக்கிழமை நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விருதுநகர் ஒன்றியக்குழுத் தலைவரான கி. கலாநிதி, விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இவர், கடந்த சில நாட்களாக ஒன்றிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை விருதுநகர் நகராட்சி எல்லைக்குள்பட்ட அன்னை சிவகாமிபுரம், பெருமாள் கோவில் தெரு, மேலத்தெரு, அண்ணாமலை செட்டியார் தெரு, சிவன் கோவில் தெரு, ஓடத்தெரு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விருதுநகர் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் குடி தண்ணீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், சாலை விரிவாக்கம் செய்யப்படும், மேலும், பொதுமக்கள் என்னை அணுகி எப்போது வேண்டுமானாலும் குறைகளை தெரிவிக்கலாம்.

குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் சங்கரலிங்கம், நகர் மன்ற தலைவர் சாந்தி, மாவட்ட அவை தலைவர் மருது, கவுன்சிலர் செய்யது இப்ராஹிம் உள்பட பலர் உடனிருந்தனர்.

விருதுநகரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 06,2016,

விருதுநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கி.கலாநிதி விருதுநகர் ஒன்றியம் கருப்பம்பட்டி, பாவாலி, சந்திரகிரிபுரம், எல்கைபட்டி, சீனியாபுரம், சொக்கலிங்கபுரம், குந்தலபட்டி, செங்குன்றாபுரம், எல்லிங்கநாயக்கன்பட்டி மற்றும் செங்கோட்டை ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அண்ணா தொழிற் சங்க பேரவை இணைச் செயலாளர் சு.சங்கரலிங்கம், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன் ஒன்றிய செயலாளர் மூக்கையா, கவுன்சிலர் சின்னச்சாமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் போண்டா மணி வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

விருதுநகரில் அதிமுக வேட்பாளர் கி.கலாநிதிக்கு ஆதரவாக நடிகர் போண்டா மணி திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்தார்.

  விருதுநகர் நகராட்சிக்கு உள்பட்ட கச்சேரி சாலை, ரயில்வே பீடர் சாலை, ராமமூர்த்தி சாலை, வீரபத்திரன் தெரு, அல்லி தெரு, சின்னப்பள்ளி வாசல் தெரு, அழகர்சாமி தெரு, தந்திமரத்தெரு, கட்டபொம்மன் தெரு, காந்திபுரம் தெரு ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கி.கலாநிதிக்கு ஆதரவாக நடிகர் போண்டா மணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  இதில், அதிமுக நகர செயலாளர் முகமது நெய்னார், நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நாகசுப்பிரமணியன், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 02,2016,

விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கி.கலாநிதி போட்டியிடுகிறார். ஞாயிற்றுக் கிழமை அவர்,  விருதுநகர் நகராட்சிக்கு 6,7,34, 35-ஆவது வார்டுகளில் வாக்கு சேகரித்தார்.

நகர செயலர் முகமது நெய்னார், நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், பாண்டியராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலர் சங்கரலிங்கம், ஒன்றியச் செயலர் மூக்கையா உள்பட பலர் பங்கேற்றனர்.

விருதுநகரின் முக்கிய வீதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வாக்கு சேகரிப்பு வியாபாரிகளை சந்தித்து ஆதரவு கோரினார்

விருதுநகரின் முக்கிய வீதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வாக்கு சேகரிப்பு வியாபாரிகளை சந்தித்து ஆதரவு கோரினார்ஏப்ரல் 27, 2016,

விருதுநகர்,

விருதுநகரின் முக்கிய வீதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வாக்கு சேகரித்ததுடன் வியாபார பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

அ.தி.மு.க. வேட்பாளர்

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் கலாநிதி. இவர் விருதுநகர் ஒன்றிய தலைவராகவும், தொகுதி கழக செயலாளராகவும் உள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு சமுதாய அமைப்பு நிர்வாகிகளையும், சேவை சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

நேற்று விருதுநகர் சாத்தூர் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நகராட்சி சாலை, தெப்பம் தெற்கு மற்றும் மேற்கு வீதி, மெயின் பஜார், கச்சேரி ரோடு, புளுகனூரணி ரோடு, புல்லலக்கோட்டை ரோடு மற்றும் தேசபந்துதிடல் பகுதி ஆகியவற்றில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மார்க்கெட் பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் தொகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி ஆதரவு திரட்டினார். மெயின் பஜாரில் வியாபார பிரமுகர்களை சந்தித்து தனக்கு வாய்ப்பு அளித்தால் வணிகர் நலனுக்காக உழைப்பதாக கூறியதுடன் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் கலாநிதியுடன் நகரசபை தலைவி சாந்தி, துணைத் தலைவர் மாரியப்பன், யூனியன் துணைத் தலைவர் மூக்கையா, நகர அ.தி.மு.க. செயலாளர் முகம்மது நயினார் மற்றும் நிர்வாகிகளும் அ.தி.மு.க. தொண்டர்களும் திரளாக சென்றனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Pandiarajan.K DMDK 70441
Thirteenth 2006-2011 Varadharajan.R. MDMK 50629
Twelfth 2001-06 Damodaran S. TMC(M) 49413
Eleventh 1996-01 Seenivasan, A.R.R. DMK 47247
Tenth 1991-96 Sanjay Ramaswamy ICS(SCS) 53217
Ninth 1989-91 Chokkar, R. INC 34106
Eighth 1984-89 Arumugam, A.S.A. JNP 42852
Seventh 1980-84 Sundararajan, M. ADK 40285
Sixth 1977-80 M. Sundararajan ADK 33077
Fifth 1971-77 P. Seenivasan DMK 31455

History of Virudhunagar District

Pilavakkal Dam

Virudhunagar, formerly known as Virudhupatti, is a town and the administrative headquarters of the Virudhunagar district in the South Indian state of Tamil Nadu. It is located 506 km (314 mi) southwest of the state capital Chennai and 53 km (33 mi) south of Madurai. Virudhunagar emerged as an important trade centre during the British rule. The town is the birthplace of freedom fighter K. Kamaraj, former chief minister of Tamil Nadu, and Bharat Ratna recipient. Located to the east of Kowsika River, Virudhunagar has an average elevation of 102 m (335 ft) above sea level and is largely flat with no major geological formations. The town has a humid climate and receives 780 mm (31 in) rainfall annually. Virudhunagar was a part of Madurai and has been ruled at various times by Later Pandyas, Vijayanagar Empire, Madurai Nayaks, Chanda Sahib, Carnatic kingdom and the British.

Virudhunagar is administered by a municipality covering an area of 6.39 km2 (2.47 sq mi). In 2011, the town had a population of 72,296. As the administrative headquarters of the district, the town’s economy is based on the service sector, which employs 93 per cent of the total workforce. The remaining 7 per cent is employed in agriculture, mining, quarrying, raising livestock, manufacturing, construction, trade and commerce. Roadways are the main means of transportation, while the town also has rail connectivity. The nearest airport is Madurai Airport, located 45 km (28 mi) north-east of the town. There are 14 secondary schools, two colleges of arts and sciences (one for men and one for women), one polytechnic college and three university study centres.

 

Virudhunagar District Map

Virudhunagar Area:

Area Sq. Km: 4,241

Virudhunagar Population:

Male: 967,709
Female: 974,579
Total: 1,942,288

Literacy Rates

Male: 87.71%
Female: 72.69%
Total: 80.15%